சிந்துஜா மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அந்த வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர்கள் குழுவினால், சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் தாம் ஆழ்ந்த கவலை அடைவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் சில பணியாளர்களின் கவனயீனத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இச் சம்பவத்தில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய துறைசார் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான சுகாதார அமைச்சின் முடிவை தாம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Visited 28 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *