வடக்கில் ஆவா குழுபோல கிழக்கில் கோபு குழு ; வீடொன்றில் பயங்கரம்


வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (15) இரவு 11 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட “கோபு” வாள்வெட்டுக் குழுவினர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் நடத்தி அட்டகாசம் செய்ததில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து கட்டி வைத்ததுடன் ஏனைய குழுவினர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடொன்றில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வரும் ஒருவர் அந்த பணத்தை வைத்து வவுணதீவு பிரதேசத்தில் “கோபு ரீம்” என்ற வாள்வெட்டு குழு ஒன்றை இயக்கிவருவதாக கூறப்படுகின்றது.

வதுடன் அந்த குழு பணத்தை பெற்று அவர்கள் சொல்லுபவர்களை தாக்குவது போன்ற அடியாட்கள் என்ற ரீதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (15) இரவு கொத்தியாவல பிரதேசத்திலுள்ள சது என்பவருடன் முன்விரோதம் காரணமாக அவர் மீது தாக்குதல் நடாத்த கோபு வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த 6 பேர் 3 மோட்டர்சைக்கிள்களில் அவரின் வீட்டை தேடிச் சென்ற நிலையில் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணியில் மாடுகளை கட்டிக்கொண்டிருந்த போது அவர் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள அவனது மாமனார் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்நிலையில் வாள்வெட்டு குழுவினர் அங்கு சென்று வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதில் சது மற்றும் அவரது மாமியார் படுகாயமடைந்ததையடுத்து அவர்கள் தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற சிறைச்சாலை உத்தியோகத்தரை மடக்கி பிடித்து கட்டிவைத்து பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இந்நிலையில் வாள் வெட்டு குழுவினர் கட்டிவைத்த சிறைச்சாலை உத்தியோகத்தரை மீட்டு கொண்டு மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

அதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு கொண்டு சென்றதுடன், தாக்குதலில் காயமடைந்தவர்களை மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த வாள்வெட்டு குழுவினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கசிப்பு உற்பத்தி செய்பவர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் என ஒருவரின் வீட்டுக்கு வாள்களுடன் சென்று அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளதாகவும் இவர்கள் தொடர்ந்து பிரதேசத்தில் செய்துவரும் அட்டூழியத்தையடுத்து மக்கள் பயப் பீதியில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Visited 6 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *