விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
இலங்கையில் வடகிழக்கு பகுதியில் தமிழர் அதிகம் வசிக்கும் இடங்களை ஒருங்கிணைத்து தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள்.

இலங்கையில் உள்ள சிங்கள அரசால் தமிழ் விடுதலைப்புலிகளை அடக்க இயலவில்லை.
இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் ஆயுத உதவியை பெற்ற இலங்கை அரசு தீவிர போரை மேற்கொண்டது.
2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள படைகளுக்கும் இடையே மிக கடுமையான போர் நடந்தது. அந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மே மாதம் 17-ந்தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
பிரபாகரன் உடன் அவரது மூத்த மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் இறுதிக்கட்ட போரின் போது பிரபாகரன் தப்பி சென்று விட்டதாக மற்றொரு தகவல் வெளியானது.
இந்நிலையில் பிரபாகரன் நிச்சயமாக மீண்டும் வருவார் என்று தமிழக பழம் அரசியல்வாதியான பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்கள்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் ரகசிய இடத்தில் இருப்பதாகவும் வருகிற மே மாதம் அவர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றுவார் என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிரபாகரனுடன் பொட்டு அம்மனும் வர வாய்ப்பு இருப்பதாக இந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவரான பொட்டு அம்மனும் போரில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த தகவல்களால் உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
பிரபாகரனுடன் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் இது தொடர்பாக கேட்டபோது, “எனக்கும் அப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது என கூறியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
