கொழும்பில் மாணவியை கடத்த முயன்றவர் கைது


கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைதுசெய்ய்பட்டவர் கொலன்னாவை – வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் நுழைந்து அதில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.

இதன்போது தாயும் மாணவியும் காரில் இருந்து இறங்கி சத்தமிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *