நடிகை மஞ்சு வாரியர் தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் அசுரன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் தான் தமிழில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றார். வேட்டையன் திரைப்படமானது கடந்த ஒரு வாரத்தில் ரூ. 223 கோடியை கடந்துள்ளதாக சினிமா வட்டாரம் தகவலை வெளியிட்டுள்ளது.
நடிகை மஞ்சு வாரியர் வேட்டையன் திரைப்படத்தில் வாங்கிய சம்பளம் குறித்த செய்தி தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி மஞ்சு வாரியர் இப்படத்திற்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வேட்டையின் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
