வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கை:
தென்மேல் பருவப் பெயர்ச்சியின் காரணமாக நாடு முழுவதும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் உள்ளது. சப்ரகமுவ மற்றும் நுவரெலியாவில் 75 மி.மீ. மேல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் திருகோணமலையில் 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மற்ற பிரதேசங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இடியுடன் கூடிய மழையில் பலத்த காற்று வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுக்க வேண்டும்.
Visited 56 times, 1 visit(s) today
