யாழ் பல்கலைக்கழக கல்வித்துறையின் தலைவரராணசிரேஷ்ட விரிவுரையாளர் ஆனந்தமயில் நித்திலவர்ணன் அவர்களின் மனைவியான ஹாட்லிக் கல்லுாரி ஆசிரியை நிசாந்தினி தீ விபத்தில் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் நித்தியவர்ணனும் மனைவியும் கொழும்புக்கு சென்று திரும்பி அதிகாலை வீட்டுக்கு வந்த பின்னா அங்கு இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டதாகவும் அதன் பின்னரே குக்குரல் கேட்டதாகவும் அயலவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் விரிவுரையாளர் மற்றும் அவரது மனைவி நிசாந்தினி ஆகியோர் தமது வீட்டுக்கு வாகனம் வருவதற்கான பாதையை அகலப்படுத்துவதற்காக எடுத்த நடவடிக்கை மூலம் அயலவர்களுடன் மோதலில் ஈடுபட்டு வந்ததாகவும் அயலவாகள் சிலரின் காணி வேலிகளை பிடுங்கி பாதையை அகலமாக்க நடவடிக்கை எடுத்ததன் காரணமாக அயலவர்களுடன் இவர்கள் முரண்பட்டதாகவும் கூறுகின்றார்கள்.
நிசாந்தினியின் உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள் தீ விபத்தால் ஏற்பட்டவையாக இருக்காது எனவும் தனக்குத் தானே எரிபொருள் ஊற்றி எரித்தமைக்கான சாத்தியக்கூறுகள் ( முற்பகுதி, தலைப்பகுதி எரிகாயங்கள்) காணப்படுவதாகவும் சடலத்தை பார்வையிட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
