கொழும்பில் இருந்து சென்ற புகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள ரயில் கடவைக்கு அருகில்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Visited 3 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *