Samugam

    • Sample Page
Illustration of a bird flying.
  • கனடாவில் பெண்ணின் சடலத்தை புகைப்படம் எடுத்தவர் பணி நீக்கம்!

    கனடாவில் பெண்ணின் சடலத்தை புகைப்படம் எடுத்தவர் பணி நீக்கம்!

    கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக்…

    December 11, 2025
  • அகதியாக வாழ் விருப்பமில்லை ; ஜேர்மனியில் யாழ் இளைஞர் தற்கொலை

    அகதியாக வாழ் விருப்பமில்லை ; ஜேர்மனியில் யாழ் இளைஞர்  தற்கொலை

    ஜேர்மனியில் யாழ்ப்பாண்ம் – ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் வயது 25 என்ற இளைஞன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமி அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி முகாமில் பதிவு செய்து முகாமில் தாங்கவைக்கப்பட்டுள்ளார் . விசாஇன்மை ,வேலைஇன்மை தனிமை ,மொழிப் பிரச்சனை நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரத்திக்குள்ளாகி அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி…

    December 10, 2025
  • அனில் அம்பானி மகன் மீது மோசடி வழக்கு

    அனில் அம்பானி மகன் மீது மோசடி வழக்கு

    தொழில​திபர் அனில் அம்பானி தலை​மையி​லான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரிலை​யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு​வனம் (ஆர்​எச்​எப்​எல்), யூனியன் பாங்க் ஆப் இந்​தி​யா​வில் (முன்பு ஆந்​திரா வங்​கி) வாங்​கிய ரூ.228 கோடி கடனை முறை​யாக திருப்​பிச் செலுத்​த​வில்லை என கூறப்​படு​கிறது. இதையடுத்​து, கடந்த 2019-ம் ஆண்டு செப்​டம்​பர் 30-ம் திகதி, இந்​தக் கடனை வாராக் கடனாக வகைப்​படுத்​தி​யது. மேலும் இது தொடர்​பாக யூனியன் வங்கி சார்​பில்…

    December 10, 2025
  • மண் சரிவில் புதைந்து உயிரிழந்த குடும்பம்; மீட்க உதவிய அவர்கள் வளர்த்த நாய்

    மண் சரிவில் புதைந்து உயிரிழந்த குடும்பம்; மீட்க உதவிய அவர்கள் வளர்த்த நாய்

    நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பல குடும்பங்கள் மண்ணுக்கு இரையாகின. இந்நிலையில் மாத்தளை, பல்லேபொல, அம்பொக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். குறித்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்தநிலையில், அவ் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டாரை கண்டுபிடித்துக்கொடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் தற்போதும் மண்சரிவு அபாய நிலை காணப்படுவதால் அங்குள்ள மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள்…

    December 10, 2025
  • அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளை

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளை

    நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் நேரத்தில், அவர்களின் சொத்துக்களை திருடும் கும்பல்களுக்கு…

    December 10, 2025
  • தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்; தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

    தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்; தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

    தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில்…

    December 9, 2025
  • ஆடைகடையில் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா!

    ஆடைகடையில் உடைமாற்றும் இடத்தில் ரகசிய கேமரா!

    தலவத்துகொடையில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள ஆடை மாற்றும் அறையில் இரகசியமாக கெமரா வைத்த கடையின் உரிமையாளரை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்ததில், இளம் பெண்கள் ஆடைகளை மாற்றும் 201 காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர் 43 வயதான கொட்டாவ, பங்களாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. குறித்த காணொளிகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையதளங்களில் விற்பனை செய்தாரா என காவல்துறையினர் சந்தேகித்து வருகின்றனர். சம்பவம்…

    December 9, 2025
  • முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 250 மில்லியன் நன்கொடை!

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா 250 மில்லியன் நன்கொடை!

    முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு 250 மில்லியன் ரூபாவினை பங்களித்துள்ளது. இந்தப் பங்களிப்பை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கையளித்தார். அண்மைய பாதகமான வானிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்கட்டமைப்பு மற்றும் உதவிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    December 9, 2025
  • கொடுக்கல் வாங்கலால் இளைஞன் கொலை

    கொடுக்கல் வாங்கலால் இளைஞன் கொலை

    பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலான வீதிப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலின்போது, காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக நபர் ஒருவர், அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக…

    December 9, 2025
  • பிள்ளைக்கு பொறுப்பேற்க மறுக்கும் இலங்கை கிரிகெட் வீரர்; மரபணு பரிசோதனைக்கு மறுப்பு

    பிள்ளைக்கு பொறுப்பேற்க மறுக்கும் இலங்கை கிரிகெட் வீரர்; மரபணு பரிசோதனைக்கு மறுப்பு

    விமானப் பணிப்பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. மனுதாரரான செவ்வந்தி சேனாதீர என்பவர், சாமிக கருணாரத்னவுடன் தனக்கு இருந்த தொடர்பினால் தமக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை சாமிக்க கருணாரத்னவே தந்தை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை கோரியிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சாமிக கருணாரத்னவின்…

    December 9, 2025
←Previous Page
1 2 3 4 … 333
Next Page→

Samugam

Proudly powered by WordPress