-
வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு! விடுதி முகாமையாளர் கைது

வவுனியா – தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் குறித்து விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றுக்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்கு உடந்தையாக…
-
கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்கள் நிறைவேற்றம்

கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தெற்காசியாவில் அதிநவீன சட்ட முறைமை கொண்ட ஒரே நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊழலை ஒழிப்பதற்கு பல புரட்சிகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை இன்று (15) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
-
o/l பரீட்சைக்குச் சென்ற இரு மாணவிகள் மாயம் !

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு மாணவிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவிகள் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (14) சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பரீட்சை நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இந் நிலையில் அவர்களில் ஒரு மாணவி தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்குச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல்போன இரு மாணவிகளும் நெருங்கிய நண்பர்கள் எனவும் இவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்திற்கு அருகில் வைத்துப் பார்த்ததாகவும்…
-
விடுதலைப் புலிகள் மீதான தடை; இயக்குநர் கௌதமன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை நீட்டிப்பு என்பது அர்த்தமற்றது மட்டுமல்ல அறமற்றது என இயக்குநர் வ கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும். இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி…
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

இறுதிக்கப்பட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தமிழின படுகொலை நாள் மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கும் ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்து சமூக சேவகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்முனை நீதிமன்ற நீதிபதியின் கையொப்பத்துடன் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவினால் இந்த தடையுத்தரவு பத்திரம் வழங்க…
-
அவுஸ்திரேலியாவில் மனைவி, பிள்ளைகள்; இலங்கையில் 5 யுவதிகளை ஏமாற்றி திருமணம் செய்த நபர்

அவுஸ்திரேலியாவில் மனைவி, 4 பெண் பிள்ளைகள் விட்டுவிட்டு இலங்கைக்கு வந்த நபரொருவர் 4 ஆண்டுகளில் 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் ஒன்று அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டு ஆசை காட்டி, 30 வயதிற்கும் குறைவான 5 பெண்களை, 4 வருடத்தினுள் திருமணம் செய்து 52 வயதான இலங்கையர் ஒருவர் ஏமாற்றியுள்ளார். 52 வயதான இலங்கையர் ஒருவர் 5 வருடங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் உள்ள தனது குடும்ப வாழ்க்கையை மறைத்து தாயகத்திற்கு சென்று அங்குள்ள பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து,…
-
யாழில் அரச உத்தியோகத்தரின் முத்திரையை பயன்படுத்தி 17 இலட்சம் மோசடி

யாழ்ப்பாணம், கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார். 2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த…
-
விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய உள்விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தடை நீடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும்…
-
அஹுங்கல்ல துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர் அதிரடி கைது!

அண்மையில் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கொஸ்கொட பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கொஸ்கொட துவாமோதர பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். “அடரே” என அழைக்கப்படும் கைது செய்யப்பட்ட நபர், மே 08ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவியதாக…
-
புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் தடை!

களனியிலிருந்து பிரதான பாதை மற்றும் புத்தளம் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
