-
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம்

இந்தியா – திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் , மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரும் பிணையில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதனையடுத்து, ரிதன்யாவுக்கு சொந்தமான 2 கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு…
-
யாழில் வாடகைக்கு வீடு பெற்று தங்க ஆபரணங்கள் கொள்ளை

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் அவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 7 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவம்…
-
மீண்டும் மிரட்டும் கொரோனா; மலேசியாவில் ஆயிரக்கணக்கில் பாதிப்பு

மலேசியாவில் கொரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சலால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டில் உலகை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது ஓய்ந்து விட்டாலும், குளிர் காலம் தொடங்கும்போது அதன் வேரியண்ட் எங்கேயாவது உண்டாகி அச்சுறுத்தல் அளிக்கிறது. அவ்வாறாக கடந்த முறை இந்தியாவில் கண்டறியப்பட்ட எக்ஸ்.எஃப்.ஜி வகை கொரோனா தற்போது மலேசியாவில் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட இன்புளூயன்சா காய்ச்சல் போன்றவற்றால் ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 97 ஆக…
-
இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் விடயத்தில் தடுப்புக்காவல் உத்தரவுகள்

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும்…
-
யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி 30 கோடி மோசடி

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் காணப்படுகின்றன. அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்று முன் தினம் (13) கைது செய்தனர். கைது செய்து விசாரணைகளின்…
-
யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் இஷாரா செவ்வந்தக்கு கடவுச்சீட்டு

கணேமுல்ல சஞ்சீவ கொசை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாள நாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19…
-
மூட்டை முடிச்சுக்களுடன் துரத்தப்பட்ட யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய…
-
பிரிகேடியர் விதுசாவின் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் அரசியல்வாதிகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் தந்தை கணபதிப்பிள்ளை கந்தையாவின் (கப்பூது ஐயா) இறுதிச்சடங்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கரவெட்டியில் நடைபெற்றது. இறுதி கிரியையின் போது, முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
-
யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை…

