-
யாழ் சங்குபிட்டி பாலத்தில் அரங்கேறிய கொடூரம்

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய பெண்ணின் தலையில் பலமாக தாக்கியமைக்காக சான்றுகளும் , முகத்தில் எரிய கூடிய திரவம் ஒன்றினை ஊற்றி எரியூட்டிமைக்கான சான்றுகளும் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கி இருந்த நிலையில் , குறித்த பெண் காரைநகர் பகுதியை சேர்ந்த 02 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந் நிலையில் , யாழ் . போதனா…
-
Crypto கரண்சியால் யாழில் விபரீத முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்

திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இ தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் , யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் தங்கராசா ராஜ்குமார் வயது 30 என்ற உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். திருமணம் செய்து மூன்று வருடங்களான நிலையில் மனைவியுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . உலகளாவிய ரீதியில் Crypto பாரிய சரிவை…
-
முடிவுக்கு வந்தது இஸ்ரேல் – ஹமாஸ் போர் ; பிணைக்கைதிகள் விடுவிப்பு; மக்கள் மகிழ்ச்சி

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இரண்டு ஆண்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் பிடியில் இருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். மொத்தம் இரண்டு கட்டங்களாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்டத்தில் 13 பிணைக்கைதிகள் தெற்கு காசாவின் கான் யூனிஸில் வைத்து மாற்றப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை மையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பின் தங்கள்…
-
11 நாட்களில் 600 கோடி வசூல் செய்த காந்தாரா சாப்டர் 1

2025 ஆம் ஆண்டு பிரம்மாண்ட பான் இந்தியன் திரைப்படமாக காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகின் முன்னணி ஹீரோவான ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இவருடன் இணைந்து ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்த நிலையில், 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,…
-
கரூர் சம்பவம்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் இது தொடர்பாக பல வழக்குகள் நடந்து வருகின்றன. இடையே தமிழக அரசு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தையும் அமைத்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி…
-
பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள்…
-
யாழில் அம்புலன்ஸ் வாகனத்தில் நடந்த கூத்து; பொதுமகனால் தலைதெறிக்க ஓட்டம்

இலங்கை சுகாதார சேவையைச் சேர்ந்த வாகனம் ஒன்றில் வந்த இருவர் யாழ் அல்லைப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வாகனத்தை ஓரமாக மர நிழலில் நிறுத்திவிட்டு ஆற அமர ஆத்தல் எடுத்த காட்சி. யாழ் அல்லைப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வாகனத்தை ஓரமாக மர நிழலில் நிறுத்திவிட்டு ஆற அமர bear அருந்தீய நிலையில் பொதுமனிடம் சிக்கியுள்ளனர். இதன்போது அவர்கள் அனுராதபுரத்தில் இருந்து வந்தமை தெரியவந்துள்ளது. அப்புலன்ஸ் வாகனத்தில் எப்படி நீங்கள் மது அஎடுத்து வருவீர்கள் என பொது மகன் கேள்வி…
-
முல்லைத்தீவில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவரின் மோசமான செயல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் குடும்பஸ்தரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அவருடைய 18 வயதுடைய மனைவியிடமிருந்து 80 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் அவர்களுடன் குறித்த வீட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளம் பெண்ணிடமிருந்து 9 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த திடீர்…
-
யாழில் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு பெண் உயிரிழப்பு

யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெண் மன அழுத்தம் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் உட்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு சுகவீனம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழில் உறவினர் வீட்டில் உயிர் மாய்த்த நபர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சண்முகவடிவேல் (வயது 55) என்பவர், தவறான முடிவெடுத்து நேற்று (10) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவர் நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தவர்களின் அறிவிப்பின் பேரில் அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். அவரது சடலம் மீதான…
