பிள்ளையான் கும்பல் மாவட்டத்தைத் தமது சொந்த இராச்சியமாக உறுதி எழுதி விட்டார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டக்காணிகள் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் பிளையானாலும கும்பலாலும் திருடப்பட்டுள்ளன.
இதற்கு எடுத்துக்காட்டாக 19.05.2024 அன்று பேத்தாளையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
பேத்தாளைக்கு அண்மையிலுள்ள கருங்காலிச் சோலை என்னும் ஊரில் விளையாட்டுப் போட்டியொன்று அங்குள்ள இளைஞர்களால் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு அதிதியாக அவ்விளையாட்டுக்கழகத்துடன் தொடர்புடைய அபிமானியான பிறைசூடி அவர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனை அறிந்த புள்ளையானின் அடியாள் கும்பல் தலைவனும் தம்பியும் சட்டவிரோத வியாபாரியுமான அகிலன் விளயாட்டுக்கழக வீரர்களை மிரட்டித் தனது அண்ணன் பிள்ளையானை பிரதம அதிதியாக அழைக்க வேண்டும் என்றும் பிறைசூடியை அழைக்கக் கூடாது என்றும் ஆணையிட்டார்.
அதனை விளையாட்டு வீரர்கள் மறுத்ததால் அவர்களைத் தாக்கியுள்ளார்கள். தற்காப்புக்காக அவர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர் பிள்ளையானின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி,நான்கு விளையாட்டுக்கழக வீரர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.
பின்னர் அகிலன் தலைமையிலான பிள்ளையானின் அடியாள் கும்பல் விளையாட்டுக்கழக வீரர்களின் வீடுகளுக்குள் இரவு வேளையில் சென்று காடைத்தனமாகத் தாக்கியுள்ளனர்.இதனைப் பொலிசாரிடம் முறையிட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இங்கு பிள்ளையான் தனது அதிகாரத்தினை சட்டவிரோதமாகப் பிரயோகித்து வருகின்றார். கருங்காலி ச்சோலை விளையாட்டுப் போட்டியை நடாத்தாமல் பிள்ளையான் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும் பாடசாலை அதிபரை மைதானத்தினை வழங்கக் கூடாது என்று பிள்ளையான் மிரட்டியுள்ளதாகவும் அறியப்படுகின்றது.
பேத்தாளை வட்டாரத் தமிழரசுக் கட்சிக்கிளைத் தலைவர் மற்றும் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் பிள்ளையானின் கும்பல் கைது செய்யப்படவில்லை.
மேலும் பிள்ளையானின் தம்பி அகிலனால் தாக்கப்பட்ட ஒருவரின் சகோதரன் தனது சகோதரனுக்கு நடந்த அநியாயத்தை பிள்ளையானிடம் முறையிட்ட போது பிள்ளையான் அவரைக் காலால் உதைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
பிள்ளையான் அவரது முன்னாள் செயலாளர் அஸாத் மெளலானா குறிப்பிட்டது போல், திரிப்போலி பிளாட்டூன் கப்டன் போலவே செயற்பட்டு வருகின்றார்.
இவருக்கு புனர்வாழ்வளித்து ஜனநாயக மயப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையென்றால் பிள்ளையான் கும்பலின் அடாவடிகள் குறைய வாய்ப்பில்லை.
ராஜபக்சக்களின் திரிப்போலி பிளாட்டூன் பிடியில இருந்து பிள்ளையான் 15 ஆண்டுகளாகியும் விடுபடவில்லை.
வாழைச்சேனைப் பொலிசார் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பக்கமாக அல்லாமல்,தாக்குதல நடாத்தும் பிள்ளையான் கும்பலின் பக்கம் சாய்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் எங்கே முறையிடுவார்கள்.
பிள்ளையான் கும்பல் மக்களின் அடிப்படை உரிமைகளோடு விளையாடி வருவதை மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஜனாதிபதி அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.காட்டாட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது.
