கல்கிசை, பிரிவேனா வீதியிலுள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 பணம் மற்றும் 30 போலி எண் தகடுகளை கல்கிசை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் சந்தேக நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு மின்னணு தராசு, இரண்டு தங்க நெக்லஸ்கள், ஒரு தங்க வளையல், ஒரு தங்க மோதிரம் உள்ளிட்டவை அடங்கும்.
மேலும் கார்களுக்கான 18 போலி தகடுகள், மோட்டார் சைக்கிள்களுக்கான 8 தகடுகள், முச்சக்கரவண்டிகளுக்கான 4 தகடுகளும் அடங்கும்.
சந்தேக நபர் இப் பொருட்களை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரிடமிருந்து பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
