வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர்


சம்பந்தரின் நினைவு நாள் ஜூன் 30. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை.

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக – அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன?

‘சம்பந்தர்’களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை.
அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை – வரலாறும் மன்னிப்பதில்லை.

நாளை ‘சுத்துமாத்து’ களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை.

Visited 8 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *