ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.
வேட்டையன் திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இத்திரைப்படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இன்றைய தினம் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரானது வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
மிக முக்கியமான விஷயமாக கருதப்படுவது முதல் முறையாக இதுவரை ரிலீஸ் ஆகாது நாட்டின் முதல் முறையாக வேட்டையன் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து South Korea – வில் முதல் முறையாக ரஜினியின் வேட்டையின் திரைப்படமானது ரிலீசாக இருப்பதாக தகவல் கிடைத்தது. வருகின்ற அக்டோபர் 13 – ஆம் தேதி South Korea – வில் வெளியிடப்படும் என்றும் பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
