நான் ஜனாதிபதியாகியிருந்தால் மஹிந்தவை கைது செய்து தூக்கிடுவேன் என முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினரும் முன்னாள் இராணு வத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் ஊழல்களை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகிக்கின்றது. ஊழல், மோசடிகள் வரையறைகளைத் தகர்த்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆயிரம் சிறைகளில் அடைத்தாலும் இவர்கள் ஊழல்களைக் கைவிட மாட்டார்கள்.
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமை களை நீக்குவதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டாலும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று முன்னாள் ஜனாதி பதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களை இன்னும் அரசிடம் கையளிக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாள ரான சட்டத்தரணி விஜேராம இல்லத் தில அலரிமாளிகை மற்றும் ஜனாதி பதிசெயலகத்தில் உள்ள இருப்பதாகவும், அவை அரசால் பொறுப் பேற்கப்பட்டதன் பின்னரே தமது தனிப் பட்ட பொருட்களை அங்கிருந்து அகற்ற முடியும் என்றும் கூறுகின்றார்.
உத்தியோகபூர்வ இல்லத்தை மீள் புனரமைப்பதற்காக 50 கோடி பொது நிதியைச் செலவிட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்தப் பணத்தில் ஒரு ஏணி யையாவது வாங்கியிருப்பார் என்று நம்புகின்றீர்களா?
தனது கால்டன் இல்லத்தில் வெறும் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கதி ரைகளை வைத்திருக்கும் மஹிந்த ராஜ பக்ஷ, விஜேராம இல்லத்திலும், ஜனாதி பதிமாளிகையிலும் அதனை விடவும் பெறுமதியான தளபாடங்களையே வைத்திருந்தார். அவை அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
நான் ஜனாதிபதியாகியிருந்தால் முதலில் அதற்காக அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பேன்.
அவர்கள் மீது பல வழக்குகள் தா-க்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலைய-பொருட்களிலும், விஜேராம மாவத்தையிலுள்ள அந்தப் பொருட்களை எவ்வாறு கொள்ளையிடுவது என்பதேமஹிந்தவின் சிந்தனையாகவுள்ளது.
எனவே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஊழலை ஒழிப்பதாகப்பெருமிதம் கொண் பாலும், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ராஜ பக்ஷ குடும்பத்துக்கு எதிராக முறை யான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இவர்கள் நாட்டை மேம்படுத்தியதாக ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் நாட்டுக்குச் சேவையாற்றியதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எமக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும் உண்மையைக் கூற நாம் அச்சப்படுவதில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்
