யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் நோய்களின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று (30) இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நோய்களின் தீவிரத்தைத் தாங்க முடியாமல், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
70 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது உடலின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
Visited 5 times, 1 visit(s) today
