பசி கொடூரத்தின் உச்ச நிலை – மண் இலைகளை சாப்பிடும் மக்கள்…!


கடந்த ஆண்டு தொடங்கிய சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைக்கும் இடையே ஏற்பட்ட கலவரமானது போராக வெடித்துள்ளது. இந்த போரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சூடான் மக்கள் மிக மோசமான நிலைக்கு நாளுக்கு நாள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

சூடானில் உள்நாட்டு போர் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாயம் எதுவும் நடைபெறாமல் மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பசியின் கொடுமை தாங்க முடியாமல் சிறு குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை எதை சாப்பிடுவது என்று தெரியாமல் மண், இலை என சாப்பிட்டு வருகின்றனர். சிறு குழந்தைகள் மிக மோசமான நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்.

சூடானில் சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சில பகுதிகளில் வாழும் 18 மில்லியன் மக்கள் உணவுக்காக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்ட வருவதாகவும் புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போரில் காயம் அடைந்து 160 க்கும் ஏற்பட்டும் மக்கள் கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த போர் காரணமாக விவசாயிகளின் உற்பத்தி மிக மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டது மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்ய முடியாமல் பசியின் கொடுமை நிலைக்கு நாளுக்கு நாள் சென்று கொண்டுள்ளனர்.

 

  •  

 

No comments to show.
  •  
Visited 5 times, 1 visit(s) today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *