-
கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-
திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். நேற்று(16) அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப்…
-
யாழில் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு உடுத்துறையைப் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் உதைப்பந்தாட்ட நடுவருமான யூட் (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது விளையாட்டு கழகத்திற்கான சீருடைகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு , மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , செம்மணி பகுதியில் எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை…
-
ஒரு பெண்ணால் பறிபோன 3 பெண்களின் உயிர்

கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் பயிற்சி பெற்று வந்த ஒரு பெண் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வேகமாக வந்த மோட்டார் வாகனம், லாரியை முந்திச்…
-
டொல்பின் வேன் விபத்தில் சிகிற்சையில் இருந்தவர் உயிரிழப்பு

கடந்த வியாழக்கிழமை (25) அன்று புதுக்குடியிருப்பில் இருந்து கொழும்பு சென்ற டொல்பின் வேன் ஒன்று மீண்டும் புதுக்குடியிருப்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த நிலையில் அனுராதபுரம் – தலாவ, மீரிகம பகுதியில் வைத்து முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது . இதில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த (புதுக்குடியிருப்பு தனியார் ஆடைக் தொழிற்சாலை) ஊழியர்கள் 4 பேர் உயிரிழந்திருந்தனர். அத்துடன் 9ம் வட்டாரம் மல்லிகைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த நடராசா விஸ்னுயன்…
-
யாழ் சாவகச்சேரி கோர விபத்தில் இளைஞர் பலி

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி – நுணாவில் ஏ – 9 வீதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பரை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்த் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதனால் மேற்படி இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
-
பிறந்த நாளில் விபத்தில் பலியான இளைஞன்

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகள், தனது வீட்டிலிருந்து நுவரெலியா நகருக்குள் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், குறித்த சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் செல்ல முற்பட்டபோது, இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாகச் சென்ற லொறியில் மோதியதால் விபத்து…
-
ஏங்க…. ஒரே வீடியோவில் பிரபலமான கூமாப்பட்டி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

ஒரே வீடியோவில் பிரபலமான கூமாப்பட்டி தங்கபாண்டி, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஊர் திரும்பியபோது பேருந்தில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி கிராமத்தை தங்கப்பாண்டி ஒரே வீடியோவில் மிகவும் பிரபலமானார். அந்த வீடியோவில் ஏங்க எங்க ஊரை பாருங்க. தமிழ்நாட்டில் இப்படியொரு ஊர் இருக்கா, உலகத்துல இப்படியொரு ஊர் இருக்கா?, உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூமாப்பட்டிக்கு வந்து…
-
விபத்தில் சிக்கிய சிறிநேசன் எம்பி

மட்டக்களப்பு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பிரயாணித்த வாகனம் களுவாங்சிக்குடி பிரதேசத்தில் கார் ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துளார். அம்பாறை ஆலையடிவேம்பில் இன்று இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு சம்பவ தினமான இன்று காலை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டுவிட்டு மட்டக்களப்பை நோக்கி பிற்பகல் 4.00 மணியளவில் வாகனத்தில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அருகில் கார் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்துடன் ஒன்றோடு ஒன்று…
-
யாழில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.