Tag: Actor Vijay

  • நடிகர் விஜயின் கட்சி அலுவலகம் இடிப்பு; தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

    நடிகர் விஜயின் கட்சி அலுவலகம் இடிப்பு; தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

    சென்னையை அடுத்த திருவள்ளுவரில் அமைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகம் திடீரென ஜேசிபி மூலம் இடிக்கப்பட்ட சம்பவம், கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதன் அலுவலகங்கள் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளுவரில் அமைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட…

  • GOAT பட வசூலை முறியடித்த அமரன் – எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

    GOAT பட வசூலை முறியடித்த அமரன் – எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

    அமரன் திரைப்படம் இராணுவ வீரர்களின் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனையடுத்து உண்மை கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் மறைந்த மேஜர் முகந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவி இந்து   ரபேக்கா  கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வெளிவந்த சிவகார்த்திகேயனின் அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிவகார்த்திகேயனுக்கு  திரைஉலகில் ஒரு பெரிய…

  • தருமபுரியில் போட்டியிடும் விஜய் !

    தருமபுரியில் போட்டியிடும் விஜய் !

    நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சி கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. த.வெ.க. கொள்கைகள் மற்றும் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய உரை குறித்து அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு மற்றும் ஆதரவுக்குரல் எழுப்பினர். கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே, த.வெ.க. கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்று அக்கட்சி…

  • தவெக தலைவர் விஜய்க்கு யானை சின்னம் பொறிக்கப்பட்ட வீரவாள்!

    தவெக தலைவர் விஜய்க்கு யானை சின்னம் பொறிக்கப்பட்ட வீரவாள்!

    கடந்த 27 ஆம் திகதி தவெக முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய்க்கு யானை சின்னம் பொறிக்கப்பட்ட வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது. அந்த வாள், சோழர் காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய வாளை போன்று, அதாவது அந்த வாள் சோழர்களின் வாளின் வடிவமைப்பை போல உருவாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விஜய்க்கு அளிக்கப்பட்ட இந்த பரிசு வாள், தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் உள்ள தேசிய விருது பெற்ற…

  • கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் ; சீமான்

    கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் ; சீமான்

    நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என மதுரையில் சீமான் கூறினார். மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விக்ரவாண்டியில் விஜய் நடத்தும் தவெக மாநாடு மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். ஏனெனில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கும் போது மக்களிடம்…

  • பிரிவினைவாதம், ஊழலை ஒழிக்க வேண்டும்; தவெக தலைவர் விஜய் !

    பிரிவினைவாதம், ஊழலை ஒழிக்க வேண்டும்; தவெக தலைவர் விஜய் !

    பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன்…

  • இளைய தளபதி விஜய் இறுதிப்பட அதிகாரபூர்வ அறிவிப்பு

    இளைய தளபதி விஜய் இறுதிப்பட அதிகாரபூர்வ அறிவிப்பு

    நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது அரசியல் வருககைக்கு பிறகு இரண்டு படங்கள் நடிப்பதாக தெரிவித்திருந்தார். இதில் ஒரு படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படம் கடந்த 5ஆம் திகதி வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய்யின் 68வது படமாக வெளியாகியிருந்த இப்படம் முதல் நாளில் ரூ.126 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் தற்போது ரூ.300 கோடிக்கு மேல் வசூல்…

  • கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் இரங்கல்

    கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் இரங்கல்

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது. கனமழை காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில்…

  • நடிகர் விஜய்யை சந்தித்த கனவுக்கன்னி ரம்பா இந்திரகுமார்

    நடிகர் விஜய்யை சந்தித்த  கனவுக்கன்னி  ரம்பா இந்திரகுமார்

    நீண்ட நாட்களின் பின் 90 களில் ரசிகர்களின் மனதை வென்ற கனவுக்கன்னி ரம்பா – இந்திரகுமார் தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது நடைகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நடிகை ரம்பா மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் போன்ற வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர்.…

  • தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மற்றும் வரும் ஜூலை 3 ஆம் திகதி என இரண்டு கட்டங்களாக விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.…