Tag: America

  • டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுஸ்டிப்பு

    டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுஸ்டிப்பு

    அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க்(வயது 31) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் இளம் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதன்படி உட்டா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்லி கிர்க் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து சார்லி கிர்க்…

  • அமெரிக்காவில் கழித்த மலத்தை கையோடு ரஷ்யாவுக்கு கொண்டு சென்ற புடின்

    அமெரிக்காவில் கழித்த மலத்தை கையோடு ரஷ்யாவுக்கு கொண்டு சென்ற புடின்

    அமெரிக்கா சென்ற ரஷ்ய அதிபர் புதினின் மலத்தை அதிகாரிகள் சூட்கேஸில் பத்திரமாக எடுத்துச் சென்ற சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த போரை நிறுத்த தொடர்ந்து இரண்டு நாடுகளிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் அதற்கு இடையேவும் அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ட்ரம்ப்…

  • அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

    அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

    உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார். கணையப் புற்றுநோயுடன் நீண்ட காலமாக போராடி வந்த அவர், நேற்று (20) தமது 88 ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், விசாரணைகளில் அன்பு மற்றும் கருணைக்காக உலகம் முழுவதும் பேசப்பட்டார். நீதிபதி பிராங்க் கேப்ரியோ தனது மனிதாபிமான தீர்ப்புகளுக்காகவும், தனக்கென தனித்துவமான நீதி…

  • மர்ம நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர்

    மர்ம நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர்

    டொனால்ட் டிரம்பிற்குகணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த விபரங்களை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும் கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது. அதை மறைக்ம் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால் அவரது உடல்நலன் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் கணுக்கால் வீக்கம்…

  • அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை மாற்றிய டொனால்ட் டிரம்ப்

    அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை மாற்றிய டொனால்ட் டிரம்ப்

    இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட…

  • லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

    லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு

    குடியேற்ற உரிமை போராட்டம் காரணமாக, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குடியேறிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் முனைப்பில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி, லாஸ் ஏஞ்சலஸில் இருக்கும் சட்ட விரோத குடியேறிகளைக் கடந்த வெள்ளியன்று ICE எனப்படும் Immigration and Customs Enforcement அதிகாரிகள் கைது செய்தனர். இதனைக் கண்டித்து லாஸ் ஏஞ்சலஸில் தொடர்ந்தும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில்,…

  • டிரம்ப் உத்தரவால் பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கி சூடு

    டிரம்ப் உத்தரவால் பெண் ஊடகவியலாளர் மீது துப்பாக்கி சூடு

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் செய்தியாளர் லாரன் டோமாசி மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது. கலவரம் நடைபெறும் பகுதிக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து கமெரா முன்பு குறித்த செய்தியாளர் லாரன் விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் ரப்பர் புல்லட் துப்பாக்கியால் லாரனை குறிவைத்து சுட்டார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரனின் காலில் ரப்பர் புல்லட் பாய்ந்தது. அவர் வலியால் அலறியபடி…

  • அமெரிக்காவுக்குள் 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நுழைய தடை

    அமெரிக்காவுக்குள் 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நுழைய தடை

    12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (04) கையெழுத்திட்டார். தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன். புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்களின்…

  • டிரம்ப் உத்தரவை எதிர்த்த ஹார்வர்டு-மாணவர்களின் உரிமைக்கு ஆதரவாக நீதிமன்றம்!

    டிரம்ப் உத்தரவை எதிர்த்த ஹார்வர்டு-மாணவர்களின் உரிமைக்கு ஆதரவாக நீதிமன்றம்!

    அமெரிக்காவில் கல்வி மற்றும் குடியேற்றக் கொள்கைகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப், 2020-ம் ஆண்டு கோவிட்-19 , வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவின் படி, ஆன்லைனில் மட்டும் நடைபெறும் பாடநெறிகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்க அனுமதி பெற முடியாது என அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு, அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு மற்றும் எம்ஐடி (MIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில்…

  • விசா முடிந்தும் வெளியேறாவிட்டால்….இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

    விசா முடிந்தும் வெளியேறாவிட்டால்….இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

    விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி விசா காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பது நாடுகடத்தலுக்கும், விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில், “நீங்கள் (இந்தியர்கள்) அனுமதிக்கப்பட்ட தங்கியிருக்கும் காலத்திற்குப் பிறகும் அமெரிக்காவில் தங்கினால், நீங்கள் நாடு கடத்தப்படலாம், மேலும் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கு…