-
வீடொன்றில் இருந்த பாடசாலை மாணவன் சடலம்

அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மணவர் தமது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (9) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 16 வயதுடைய குறித்த மாணவன் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸாரின்…
-
தாயின் காதலனால் கர்ப்பமான கல்முனை மாணவி

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாடசாலைக்கு இரண்டு மாதங்களாக செல்லாத குறித்த மாணவி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் அவரது தாயாரிடம் வினவியதாகவும் உரிய…
-
சாய்ந்தமருது கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து ஒரே குடும்பத்தில் மூவல் பலி

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய…
-
யாழில் பிரான்ஸ் இளைஞன் கொலையில் அம்பாறை இளைஞர்கள் கைது

பிரான்ஸிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில், அம்பாறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்கள் அம்பாறைப் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட…
-
அம்பாறையில் அதிகாலையில் நடந்த பயங்கரம்

அம்பாறை, பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) அதிகாலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த 28 வயதான இளைஞன் கல்முனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
-
கணவர் வெளிநாட்டில் மனைவி கழுத்தறுத்து கொலை; கிழக்கிலங்கையில் பயங்கரம்

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம் பெரிய நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளின்படி, குறித்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயங்கள்…
-
தமிழர் பகுதியில் முருகனுக்கு இடமில்லை… புத்தருக்கு இடமா; மக்கள் விசனம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அம்பாறை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர்…
-
அம்பாறை பாடசாலை ஒன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர்

அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் 9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபரான பௌத்த துறவி கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 15ஆம் திகதி பாடசாலை நேரத்திற்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன. அன்றைய தினம் இடைவேளையின் போது கழிப்பறைக்குச் சென்ற பல மாணவர்கள் தண்ணீர் விசிறி விளையாட்டில் ஈடுபட்டதாக வகுப்பு ஆசிரியர் பாடசாலை அதிபருக்கு தெரிவித்திருந்தார். இதன்படி,…
-
அம்பாறையில் சொகுசு பஸ்ஸொன்று விபத்து

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து மகியங்கனையின் வேவத்த பகுதியில் இன்று புதன்கிழமை (14) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தால் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லையென மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
-
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா?

அம்பாறை, சம்மாந்துறையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா – 02 பௌஸ் மாவத்தை பகுதியில் இச்சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூன்று வயதான முஹம்மத் லுக்மான் என்ற ஆண் பிள்ளையே நீர் குழியிலிருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 3…