-
அம்பாறையில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

அம்பாறையில் சகோதரர்களுக்கு இடையிலான மோதல் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை , சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பக்கீர் முகையதீன் றோஜான் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். சகோதரர்கள் இருவருக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்த நிலையில் நேற்றைய தினமும் இருவரும் முரண்பட்டு கொண்டதாகவும், அதன் போது ஒருவர் மற்றையவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் துப்பாக்கி சூட்டுக்கு…
-
மருத்துவரின் அறிவுரையை ஏற்காததால் கோர விபத்து

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இங்கினியாகல பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட தெவாலஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், பயணிகள் உடனடியாக சாரதியை இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சாரதி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (23) இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்து புறப்பட்டுள்ளது. சாரதிக்கு…
-
பொலிஸ் நிலைய குளிர்சாதனப் பெட்டியில் இருந்த ஆட்டிறைச்சி எங்கே? 4 பொலிசருக்கு நேர்ந்த கதி

அம்பாறை பொலிஸ் நிலையத்தின் குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் அதிகாரிகளுக்கு தண்டனையாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26-07-2024) அன்று அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை…
