Tag: Army

  • கிளிநொச்சியில் முப்பது ஏக்கர் காணிகள் விடுவிப்பு

    கிளிநொச்சியில் முப்பது ஏக்கர் காணிகள் விடுவிப்பு

    கடந்த 2009 ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார்கள் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 7 ஏக்கர் காணிகள் இம்மாதம் 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள…

  • யாழில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம்

    யாழில் இராணுவ வாகனம் மோதி இளைஞன் படுகாயம்

    யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

  • முத்தையன்கட்டு சம்பவம் ; கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல்!

    முத்தையன்கட்டு சம்பவம் ; கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல்!

    முல்லைத்தீவு – முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை. நாங்கள் இந்த சம்பவத்தினை…

  • நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனத்தால் பரபரப்பு

    நல்லூருக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனத்தால் பரபரப்பு

    யாழ். நல்லூர் ஆலய வீதித் தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. ஆலய மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வரையில் நல்லூர் ஆலயச் சுற்று வீதிகள் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு மாற்று வீதிகள் ஊடாகவே…

  • யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் ஆரம்பம்

    யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் ஆரம்பம்

    இடைநிறுத்தப்பட்ட யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அந்தப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர்…

  • விடுவிக்கப்பட்ட ஆலயத்திற்கு செல்ல அனுமதி இல்லை; படம்காட்டும் இளங்குமரன்

    விடுவிக்கப்பட்ட ஆலயத்திற்கு செல்ல அனுமதி இல்லை; படம்காட்டும் இளங்குமரன்

    பெரும்பிரச்சாரங்களுடன் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்ல முழுமையான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழமையான நடைமுறையில்; இராணுவ சோதனைச்சாவடிகளில் பதிவு நடவடிக்கை மேற்கொண்ட பின்னரே வெள்ளிக்கிழமை மற்றும் விசேட நாட்களில் பூசைகள் செய்வதாயின் அனுமதி பெற்றுச் செல்லலாம். ஆதனை விடுத்து கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுதந்திரமாக எவ்வேளையும் செல்லுவதற்கான அனுமதி இன்னமும் பக்தர்களிற்கு வழங்கப்படவில்லையென மீள்குடியேற்ற குழு அறிவித்துள்ளது. முன்னதாக மக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தேசிய மக்கள்…

  • பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிய சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் கைது

    பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிய சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் கைது

    கொழும்பில் உள்ள SSC மைதானத்திற்குள் இராணுவ சீருடை அணிந்து நுழைந்து இரண்டு தனியார் பாதுகாப்புப் பணியாளர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருந்துவத்த காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேக நபர் தனது சட்டத்தரணி மூலம் காவல்துறையிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார். பாடசாலை கிரிக்கெட் போட்டிக்கு முதல்நாள் நடந்த சம்பவம் மே 18 அன்று கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவிருந்த D.S. சேனநாயக்க கல்லூரிக்கும் மகாநாம கல்லூரிக்கும் இடையிலான ஒரு நாள்…

  • 30 வருடங்களுக்குப் பின் அச்சுவேலி நவகிரி சித்த வைத்தியசாலை காணி கையளிப்பு

    30 வருடங்களுக்குப் பின் அச்சுவேலி நவகிரி சித்த வைத்தியசாலை காணி கையளிப்பு

    யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி சித்த வைத்தியசாலைக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியை 30 வருடங்களுக்குப் பின்னர் இராணுவத்தினர் மீளக் கையளித்துள்ளனர். குறித்த காணி, கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டது. சித்த வைத்தியசாலைக்குத் தேவையான மூலிகைகளைப் பயிரிடும் காணியாகக் குறித்த காணி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • யாழில். 35 ஆண்டுகளின் பின் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி

    யாழில். 35 ஆண்டுகளின் பின் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி

    யாழ்ப்பாணம். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு…

  • மட்டக்களப்பில் மர்ம பொருள் வெடிப்பு

    மட்டக்களப்பில் மர்ம பொருள் வெடிப்பு

    மட்டக்களப்பு , ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்து வந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்ட போது , குறித்த பொருள் வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்துள்ளார். ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த வரதராஜன் (வயது 23) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த இளைஞனை மீட்டு, ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.