Tag: Arrest

  • யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் இஷாரா செவ்வந்தக்கு கடவுச்சீட்டு

    யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் இஷாரா செவ்வந்தக்கு கடவுச்சீட்டு

    கணேமுல்ல சஞ்சீவ கொசை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாள நாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணப் பெண்ணின் பெயரில் போலியான கடவுச்சீட்டைத் தயாரித்து ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19…

  • பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    பெங்களூரு விமான நிலையத்தில் போதை பொருளுடன் சிக்கிய இலங்கையர்

    இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 45.4 கிலோ உயர்ரக கஞ்சா மற்றும் 6 கிலோ சைலோசைபின் காளான்களுடன் இலங்கையர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உயர்ரக போதை பொருள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சோதனையில் இலங்கை விமானத்தில் வந்த சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அவர்கள்…

  • யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு; விமான நிலையத்தில் கைது

    யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு; விமான நிலையத்தில் கைது

    யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சி

    கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சி

    இலங்கையில் இடம்பெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். காலியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் 100 பேரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டால், 98பேர் குற்றமற்றவர்களாக வீடுசெல்கிறார்கள். இந்த கலாசாரத்தை மாற்றுவதாக இருந்தால், அரசியலமைப்பில் இந்த உறுப்புரைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. விசாரணைகளை பலப்படுத்த வேண்டி இருக்கிறது. விசாரணைகளின் அறிக்கையின்…

  • கிழக்குப் பல்கலைக்கழக 6 மாணவிகள் உட்பட 15 பேர் கைது

    கிழக்குப் பல்கலைக்கழக 6 மாணவிகள் உட்பட 15 பேர் கைது

    கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 6 மாணவிகள் மற்றும் 9 ஆண் மாணவர்களை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது. அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பயிலும் மாணவிகள் குழுவை சந்தேக நபர்கள் பகிடிவதை வன்கொடுமை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த முறைப்பாடுகளின்…

  • போலி காருடன் பெண் வைத்தியர் கைது

    போலி காருடன் பெண் வைத்தியர் கைது

    போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மகிழுந்தை ஓட்டி வந்த பெண் வைத்தியர் ஒருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் கண்டியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஆவார். கைது செய்யப்பட்ட பெண் வைத்தியர், மகிழுந்து தனது கணவருக்கு சொந்தமானது என கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இவர் அந்த மகிழுந்துக்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை, இது குறித்து விசாரணையில் அவரது கணவரின் சகோதரரின் மகிழுந்தின் இலக்க…

  • ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க வலியுறுத்தும் எரிக் சொல்ஹொய்ம்

    ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்க வலியுறுத்தும் எரிக் சொல்ஹொய்ம்

    கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹொய்ம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளமையாவது, விளக்கமறியலில் உள்ள ரணிலின் உடல்நிலை குறித்து நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். 2022 ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற எழுந்து நின்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில்…

  • முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

    முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

    வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு…

  • யாழில் கர்ப்பிணி அரச அதிகாரி உயிரிழப்பு; கணவன் கைது

    யாழில் கர்ப்பிணி அரச அதிகாரி உயிரிழப்பு; கணவன் கைது

    யாழ்ப்பாணம் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில்…

  • பாகிஸ்தானில் இலங்கையர்கள் உட்பட 149 பேர் கைது

    பாகிஸ்தானில் இலங்கையர்கள் உட்பட 149 பேர் கைது

    பாக்கிஸ்தான் – பைசலாபாத்தில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய பாரிய சோதனையில் கைது செய்யப்பட்ட 149 பேரில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவர் என பாக்கிஸ்தான் சைபர் குற்ற புலனாய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியது. ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், போன்சி திட்டங்கள் மற்றும் போலி முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்ட ஒரு பெரிய அளவிலான நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டது என்று NCCIA அதிகாரிகள் தெரிவித்தனர். அதிக வருமானம் தரும் முதலீட்டு வாய்ப்புகள் என்ற…