-
பிள்ளைக்கு பொறுப்பேற்க மறுக்கும் இலங்கை கிரிகெட் வீரர்; மரபணு பரிசோதனைக்கு மறுப்பு

விமானப் பணிப்பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக கருணாரத்னவுக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. மனுதாரரான செவ்வந்தி சேனாதீர என்பவர், சாமிக கருணாரத்னவுடன் தனக்கு இருந்த தொடர்பினால் தமக்கு குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை சாமிக்க கருணாரத்னவே தந்தை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை கோரியிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் இன்று நீதிமன்றில் முன்னிலையான சாமிக கருணாரத்னவின்…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தை பிரசவித்த வௌிநாட்டுப் பெண்

டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார். அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவராவார். இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வதற்காக விமான நிலையத்தின் இடைமாறு பயணிகள் முனையத்தில் (Transit terminal) காத்திருந்துள்ளார். இதன்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக…
-
ரயில் கழிப்பறையில் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம்

மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 8346ஆம் எண் ரயிலின் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் தொப்புள் கொடியுடன் பெண் சிசுவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சிசுவுக்கு வயது சுமார் மூன்று நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரவு பயணத்தை முடித்து புத்தளத்திலிருந்து கல்கிசை நோக்கி வந்த ரயில் மாளிகாவத்தை நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதைப் பராமரிக்கச் சென்ற தொழிலாளர்கள் குழுவினர், மூன்றாம் வகுப்பு பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து சோதனை செய்தபோது, ஒரு பையில் சுற்றப்பட்ட…
-
பிறந்த குழந்தையை வயலில் வீசிய தாய் ; குருநாகலில் அதிர்ச்சி சம்பவம்

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. இந்த…
-
தாயாகும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை

ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைந்துவருகிறது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. ரஷ்யா — உக்ரைன் போரும், மக்கள்…
-
இலங்கையில் கொவிட்டினால் குழந்தை உயிரிழப்பு

கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மே 17ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நிமோனியா பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உடனடியாக குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
பதுளை சிறுவர் காப்பகத்தில் குழந்தை ஒன்று திடீர் உயிரிழப்பு

சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்த 3 மாத குழந்தை ஒன்று தீடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை – பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள சிறுவர் காப்பக குழந்தையே உயிரிழந்துள்ளனர். குழந்தை தீடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பெண் குழந்தையை கொன்று புதைத்த கொடூரம்

ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சேர்ந்த பாலமுருகன், சிவசக்தி தம்பதிக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை நிலையில் சிவசக்திக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. மர்மமாக உயிரிழந்த குழந்தை தாயும், சேயும் நலமுடம் இருந்த நிலையில் ஏப்ரல் 20ம் திகதி குழந்தை மர்மமான முறையில்…
-
யாழில் மிரளவைக்கும் இரண்டரை வயது சிறுமி; பெற்றோர் பூரிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி அசத்தியுள்ளர். சிறுமியின் அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமியே இவ்வாறு பல்லரையும் வியப்பில் ஆழ்த்துள்ளார். காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்க அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக…
-
தத்தெடுத்த குழந்தையை கொன்ற கொழும்பு தம்பதிக்கு மரண தண்டனை!

வளர்ப்பதற்காக தத்தெடுக்கப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக தம்பதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (6) மரண தண்டனை விதித்தது. மாலிகாவத்தை பகுதியை சேர்ந்த தம்பதி 2018 மே 11 அல்லது அதற்கு அருகிலுள்ள நாளில் மாளிகாவத்தை பகுதியில் இரண்டு வயது ஆண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக இந்த இரண்டு பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்தார். சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இரண்டு வயது ஆண் குழந்தையின்…