-
குழந்தைக்கு நோயை குணப்படுத்த 40 முறை சூடு வைத்த உறவுகள்

இந்தியாவின் ஒடிசாவில் ஒரு மாத ஆண் குழந்தைக்கு நோயை குணப்படுத்த சுமார் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டம், சந்தாஹண்டி அருகே உள்ள கம்பரிகுடா பகுதியை சேர்ந்த இக்குழந்தை, சூடு வைக்கப்பட்ட பிறகு அதன் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து உமர்கோட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்தக் குழந்தையின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாக நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும்…
-
மலசலகூடத்தில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மட்டக்களப்பு மாணவி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் வைத்து சிசுவை பெற்று, யன்னல் வழியாக வீசிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 18 வயது மாணவி ஞாயிற்றுக்கிழமை(23) அதிகாலை கைது செய்யப்பட்டதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். உயர் தரத்தில் கல்விகற்றுவரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவ தினமான இன்று அதிகாலை 3.20 அளவில் தாம் கர்ப்பிணி என்பதை தெரிவிக்காமல் வயிற்றுவலி எனக்கூறி சிகிச்சை பெறுவதற்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, ஆரம்ப சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.…
-
யாழில் புதிதாகப் பிறந்த குழந்தையை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி முத்தையா தோட்ட பகுதியில் , புதிதாகப் பிறந்த குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. தோட்டத்தில் வேலை செய்வதற்காக வந்தவர்கள் கிணற்றில் நீர் எடுக்க முற்பட்ட வேளை சிசுவின் சடலத்தை பார்த்ததும் கிராம சேவகர் மூலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர். பொலிஸார் மற்றும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கு…
-
குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்?

ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தில் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வீட்டொன்றில் 16ஆம் திகதி இரவு குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது. இந்த செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின்…
-
யாழில் சுவாசக் குழாயில் கச்சான் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை கச்சான் பருப்பு சுவாசக் குழாயில் சிக்கியதால் உயிரிழந்துள்ளது. சுன்னாகம், ஐயனார் வீதி பகுதியை சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தை நேற்றுகச்சான் சாப்பிட்டவேளை புரையேறியது. பின்னர் குழந்தை உறங்கி விட்டது. நேற்று இரவு எழுந்து வாந்தி எடுத்த குழந்தை அழுதவேளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சுவாசக் குழாயில்…
-
இலங்கையில் குழந்தைப்பிறப்பு கடும் சரிவு

இலங்கையில் பிள்ளைகள் பிறக்கும் வீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை குழந்தைகள் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 350,000 ஆக பிறப்பு எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு 250,000 ஆக குறைவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். வெளிநாட்டுக்கு பலர் சென்றுள்ளதனாலும், நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற் கொன்டு பிள்ளை பெறுவதனை பலர் தள்ளிப்போட்டு வருவதாகும், பலர் குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள அவர் பலர் திருமணம் செய்வதனையும் தவிர்த்தது வருவதாகும் மேலும் கூறியுள்ளார்.…
-
யாழில் குழந்தையை பற்றைக்குள் வீசி பொலிஸார் அராஜகம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய் தந்தை உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார் .அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் வீதியால் வந்துகொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு…
-
15 வயதில் குழந்தை பெற்ற உலக அழகி ஐஸ்வர்யா ராய்?

உலகளவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்ற இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தார். பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தமிழில் ராவணன், எந்திரன், ஜீன்ஸ், பொன்னியின் செல்வன் என சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். சமீபகாலாமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும் அதனால் விரைவில் இருவரும் விவாகரத்து…
-
யாழ்ப்பாணத்தில் 45 நாட்களேயான குழந்தை திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டது. அதையடுத்து குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்தது. குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில்,…
-
முச்சக்கரவண்டி ஒன்றில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை; பாதக செயலை செய்தது யார்?

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட என்போல்ட் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து சிசுவொன்றின் சடலமொன்று நேற்று (09) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் தோட்ட மக்கள் முச்சக்கரவண்டியினுள் சென்று பார்த்த போது கறுப்புநிற பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு நிறத் துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் சிசுவின் தாய் தொடர்பிலும், மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை…