Tag: Baby

  • குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை; இளம் பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல்!

    குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை; இளம் பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல்!

    சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே , பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில், வீசிச் சென்றதாக கூறப்படுகின்றது. குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது. உடனடியாக கலியபெருமாள் அருகில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.…

  • பையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்; சம்பவத்தால் பரபரப்பு

    பையில் குழந்தையை கடத்தி சென்ற  பெண்;  சம்பவத்தால் பரபரப்பு

    தமிழகத்தில் பெண் ஒருவர் பையில் குழந்தை ஒன்றை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிவருகையில், தமிழகம் வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியில் தொழிலாளியாக இருப்பவர் கோவிந்தன், 25. இவரது மனைவி சின்னி. பிரசவத்துக்காக சின்னி ஜூலை 27ஆம் தேதி இரவு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதே நாள் இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள் பிரசவ வாா்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையில் இருந்தாா். அதன் பின் குழந்தைநல…

  • கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை!

    கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த  அதிசய  குழந்தை!

    இந்தியாவின் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அதாவது வலது கையில்…

  • யாழ் பயணிகள் படகில் பிறந்த “கடல் குமரன்”

    யாழ் பயணிகள் படகில் பிறந்த “கடல் குமரன்”

    யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் தீவில் இருந்து குறிக்கட்டுவான் ஜெட்டிக்கு வந்து கொண்டிருந்த படகில் பெண் ஒருவர் நேற்று முன் தினம் (20) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். யாழ் வைத்தியசாலையில் குழந்தையும் தாயும் நலமுடன் இருக்கின்றனர். பிரசவத்திற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் குறித்த பெண் தனது கணவருடன் குறிக்கட்டுவானுக்கு படகில் வந்து கொண்டிருந்த போதே படகில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து படகு நடத்துனர் உடனடியாக டெல்ஃப்ட் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, மருத்துவருடன்…

  • சிகிச்சை மறுக்கப்பட்டதால் உயிரிழந்த சிசு

    சிகிச்சை மறுக்கப்பட்டதால் உயிரிழந்த சிசு

    மாத்தறை கொடவில பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை மறுக்கப்பட்டதால் 2 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி, மாத்தறை கொடவில பகுதியில் உள்ள வைத்தியசாலையில் மூச்சுத்திணறல் காரணமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

  • விபத்தில் பறிபோன குழந்தையின் உயிர்

    விபத்தில் பறிபோன குழந்தையின் உயிர்

    முச்சக்கரவண்டியொன்று மின் கம்பத்தில் மோதியதில் பின் இருக்கையில் இருந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று திவுலப்பிட்டிய, கடவல பிரதேசத்தில், இடம்பெற்றுள்ளது என திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர் . முச்சக்கரவண்டியின் சாரதியான, சிறுமியின் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது உயிரிழந்த சிறுமி தனது பாட்டி, தாய் மற்றும் தந்தையுடன் நீர்கொழும்புக்கு சென்று, வேலைக்குச் செல்வதற்காக தாயை நீர்கொழும்பில் இறக்கிவிட்டு , தனது பாட்டியுடன் முச்சக்கரவண்டியின் பின்புறம் அமர்ந்து வீட்டிற்கு வந்துள்ளார் .…

  • வவுனியாவில் சுவர் வீழ்ந்ததில் குழந்தை உயிரிழப்பு!

    வவுனியாவில் சுவர் வீழ்ந்ததில் குழந்தை உயிரிழப்பு!

    வவுனியாவில் வீட்டின் சுவர் வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில் வசிக்கும் சிந்துஜன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் வவுனியாவில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு கடந்த 7 ஆம் திகதி சென்றுள்ளார். நிகழ்வொன்றுக்காக வருகை தந்திருந்த நிலையில் தங்கையின் தற்காலிக வீட்டில் தங்கியிருந்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் வீட்டில் உட்பகுயில் உள்ள கற்சுவர் குழந்தையின் மீது வீழ்ந்துள்ளது. குழந்த படுகாயமடைந்த…

  • மூன்றாவது குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன்!

    மூன்றாவது குழந்தைக்கு தந்தையான சிவகார்த்திகேயன்!

    நம்ம வீட்டு பிள்ளை என அன்பாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் அண்மையில் சூரியின் கருடன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த போது தான் வெகு நாட்களுக்க பிறகு சிவகார்த்திகேயனை காண கிடைத்தது. பின்னர் உவினர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த சிவகார்த்திகேயன் , ஆர்த்தி ஆகியோரின் ஒரு காணொளியை பார்த்து அதில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் , நேற்றைய தினம் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளங்களில் தனக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிந்துள்ளதாக பதிவிட்டதுடன்…

  • உயிரிழந்த நிலையில் குழந்தையை பிரசவித்த தாய்

    உயிரிழந்த நிலையில் குழந்தையை பிரசவித்த தாய்

    மாத்தறை கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் 24 வயதுடைய தாய்க்கு உயிரிழந்த நிலையில் குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர் . உயிரிழந்த குழந்தையின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர் . இந்த தாய் தனிப்பட்ட வைத்தியரின் அறிவித்தலின் பேரில் கடந்த 22 ஆம் திகதி இறந்த தனது குழந்தையைப் பிரசவிப்பதற்காக கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில் , இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் தாயைப் பரிசோதித்த…

  • என்னை மன்னித்து விடுங்கள்; யூடியூபர் இர்ஃபான்

    என்னை மன்னித்து விடுங்கள்;  யூடியூபர்  இர்ஃபான்

    தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் தமிழர்கத்தின் பிரபல யூடியூபர் இர்ஃபான் மன்னிப்பு கோரியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனது செயலுக்கு இர்ஃபான் மன்னிப்பு கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்று பரிசோதனை செய்து, தனது மனைவிக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை இர்ஃபான் பொதுவெளியில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.