-
வாழைச்சேனையில் கணவனை கொன்ற மனைவியால் அதிர்ச்சி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (15) வாகனேரி குடாமுனைகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா எனும் 46 வயதானவர். மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவர் வயல் காவல் கடமையில் ஈடுபடுபவர் என்றும் அன்றைய தினம் வயலுக்கு சென்று வீடு திரும்பியதும் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர் . குறித்த…
-
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்; தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில்…
-
மட்டக்களப்பில் அணிவகுப்பில் சிக்கிய ஆண் செவ்வந்தி!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய நடமாடி வந்துள்ள போலி சட்டத்தரணி ஒருவரை சனிக்கிழமை (08) ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களை நீதிமன்றில்…
-
மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பா

மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. அதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார். 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம்…
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் கையெழுத்துப் போராட்டம்.!

யாழ்ப்பாணம் செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் சமர்ப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது…
-
அடுத்தடுத்து கைது ; ஓட்டமெடுக்கும் பிள்ளையான் கும்பல்

பிள்ளையான் சாகாவான இனியபாரதியின் இரு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு, மற்றுமொரு நபரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த 12 அம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன்…
-
பிள்ளையானின் மற்றுமொரு சகா கைது

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்ததாகக் கூறப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து சிஐடி யினர் கைது செய்துள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளையானை கொழும்பு – குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 7ஆம் திகதி சிஐடியினர் கைது…
-
இன்று இடம்பெற்ற கோர விபத்து; பலரது நிலை கவலைக்கிடம்

கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் பத்துஓயா பாலத்திற்கு அருகில் இன்று (12) அதிகாலை 3.30 மணி அளவில் தனியார் பேருந்து ஒன்று டிப்பர் லொறியுடன் மோதிய விபத்தில் 28 பேர் காயமடைந்தனர். இவர்கள், பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராங்கொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலன்னறுவை பொது மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். அப்பகுதி மக்கள் பெரும் முயற்சி எடுத்து டிப்பர் லாரியின் சாரதியை மீட்டு…
-
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக சிவம் பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று தெரிவித்தார். சிவம் பாக்கியநாதன் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார். “ஒரு ஆச்சரியமான திருப்பமாக, NPP அரசாங்கம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
-
தங்காலையில் பேருந்து விபத்தில் ஒருவர் பலி ; பலர் காயம்

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை…