-
யாழில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு , யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக , கேக் வெட்டி கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கொண்டாட்டத்தில் ,விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகள் , சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு , பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு , வெடி கொளுத்தி பெரியளவிலான கேக் வெட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ,…
-
பிறந்த நாளில் விபத்தில் பலியான இளைஞன்

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா பொலிஸின் போக்குவரத்து அதிகாரிகள், தனது வீட்டிலிருந்து நுவரெலியா நகருக்குள் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், குறித்த சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் செல்ல முற்பட்டபோது, இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி அதிவேகமாகச் சென்ற லொறியில் மோதியதால் விபத்து…
-
சிறையில் உள்ள பிள்ளையானுக்கு 50…. பொங்கலாம் ….குருதிக்கொடையாம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தனின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஐம்பது பானைகளில் பொங்கல் நிகழ்வு மற்றும் இரத்ததான நிகழ்வும் இன்று 19/08 இடம்பெற்றது. வாகரை பிரதேச தமிழ் மக்கள், விடுதலைப் புலிகள் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பனிச்சங்கேணி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக பூசையினை தொடர்ந்து ஆலய முன்றலில் 50…
-
யாழில் பிறந்த நாள் கொண்டாட்டத்தால் பறிபோன உயிர்

யாழ்ப்பாணத்தில் கடலில் குதித்து விளையாடிய இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் திங்கட்கிழமை (18) உயிரிழந்துள்ளார். பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, நேற்றைய தினம் 09 இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் நீராடியுள்ளனர். அதன்போது, இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி கடலில் பல்டி அடித்து விளையாடியுள்ளனர். பின்னர் இளைஞன் ஒருவன் தலையில்…
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்; பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தின் பூர்வீக இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் போது அங்கு…
-
யாழில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினமான இன்றைய தினம் 26ஆம் திகதி வல்வெட்டித்துறையில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது. வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம் , கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடியதுடன், வீடு அமைந்திருந்த காணிக்குள் மர நடுகைகளும் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட…
-
ஆர்மி உடையில் மனைவிக்கு வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.…
-
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

வெள்ளவத்தை கடற்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு (29-08-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் தொழில்நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த 22 வயதான பாஸ்கரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 15 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் நீரில் மூழ்கிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு இளைஞனே…
-
யாழில் காதலை துண்டித்த காதலி; இளைஞன் மீது கொடூர தாக்குதல்

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் 3ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞனை மறித்து கும்பல் ஒன்று கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளது. சம்பவத்தில் இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சாவகச்சேரியை சேர்ந்த குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் ஹையேஸ் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை, இடையே மறைத்து வாளுடன் வந்த கும்பல் ஒன்று , குறித்த…
-
கணவரின் பிறந்த நாள் கொண்டாட யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா!

தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா , புதன்கிழமை (31) மதியம் தனது குடும்பத்தினருடன் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். ரம்பாவின் கணவரின் பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடுவதற்காகவும் அவர் யாழ்ப்பாணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதோடு ரம்பா குடும்பத்தினரால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்றன தனியார் பல்கலைக்கழகத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் அவர்கள் யாழ் வந்துள்ளதக கூறப்படுகின்றது.