-
வீடொன்றில் இருந்த பாடசாலை மாணவன் சடலம்

அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மணவர் தமது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (9) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 16 வயதுடைய குறித்த மாணவன் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸாரின்…
-
வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் மர்ம மரணம்

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராக வும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராக வும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது-60) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகின்றது. சடலத்தை…
-
வீடொன்றில் மீட்கப்பட்ட இரு சடலங்கள்

தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும்…
-
செம்மணி – சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் 22 எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் – செம்மணி – சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, இன்றைய தினம் அங்கிருந்து குழந்தையொன்றின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இதுவரை செம்மணி – சிந்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 22 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, நேற்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
-
மட்டக்களப்பில் அநாதரவான நிலையில் ஆண் ஒருவரின் சடலம்; பொலிஸார் குழப்பம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்திக்கு அருகில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (28) அன்று மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். அம்பிளாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன்(கண்ணன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (27) அன்று இரவு அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் சம்பவதினமான புதன்கிழமை (28)…
-
பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணின் சடலத்தால் பரபரப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
-
வீடொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலம்

கொழும்பு – கெஸ்பேவ, படுவன்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று (28) இரவு அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இது பெண்ணொருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவர் 8 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மருத்துவமனையில் இருந்து சடலத்தை திருடி சென்ற உறவினர்கள்; இலங்கையில் சம்பவம்

விபத்துக்குப் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரகம மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர்களை இந்தக் குழு தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும், ஊழியர்கள் மற்றும் மருத்துவமனையின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகம-கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இருவர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அந்த நபரின்…
-
வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம்

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று (01) காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று…
-
இலங்கையில் கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட இளைஞன்

அங்குணுகொலபெலஸ்ஸ – அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 23 வயதுடைய அபேசிங்க விஜேநாயக்க சந்தீப லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த மர்ம மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.