Tag: Body

  • வவுணதீவில் பரபரப்பு; அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

    வவுணதீவில் பரபரப்பு; அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

    மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த 51வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் தேடிய போதே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதிக்கு வந்த வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மரண விசாரணைகளை…

  • யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

    யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த  நபர்

    இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் பண்டத்திரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அயலவர்கள் அது குறித்து சோதித்த போது சடலம் வீட்டின் முன்புறத்தில் கிடப்பதை அவதானித்து பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நீதவான் விசாரணைகளின் பின்னர்…

  • கொழும்பில் முச்சக்கர வண்டியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு

    கொழும்பில்  முச்சக்கர வண்டியில் கிடந்த  சடலத்தால் பரபரப்பு

    கொழும்பு – 7, வோர்ட் பிளேஸ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து ஆணின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பி ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கறுவாத்தோட்ட பொலிஸாருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை ஒரு மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகிலிருந்து சடலத்துடன் காணப்பட்ட முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் பொலிஸார் மேற்கொண்ட…

  • சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

    சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

    புத்தளம் பிரதேசத்தில் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான கடற்கரை பகுதியில் பெண்ணின் சடலமொன்று சிதைவடைந்த நிலையில் நேற்று (2) மீட்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.