-
கொழும்பு நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு; அதிபர் உட்பட 7 பேர் கைது

நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர் பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது. குறித்த தினத்தன்று இறந்த சிறுவன் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில்…
-
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் உயிரை மாய்த்த இளைஞன்

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச்…
-
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் பலரையும் கவர்ந்த சிறுவன்!

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமை. அந்தவகையில் நேற்றையதினம் தந்தை ஒருவர் அங்கப் பிரதிஷ்டையில் ஈடுபடும்போது அவரது மகனான சிறுவன் தந்தையின் பின்னே பக்தியுடன் நடந்து வருவது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
-
ஜனாதிபதியான 20 வயது இளைஞன்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘வெர்டிஸ்’ என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியாகியுள்ளார். குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், “வெர்டிஸ் குடியரசு” என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற அந்த 20 வயது அவுஸ்திரேலிய இளைஞர் உருவாக்கி, தன்னை அதன் ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். இந்த நிலப்பகுதிக்கு எந்த நாடும் உரிமை கோரவில்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி…
-
தி.மு.க. கவுன்சிலரின் பேரன் உட்பட மூன்று இளைஞர்கள் கைது

சென்னையில், இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், தி.மு.க. கவுன்சிலரின் பேரன் உட்பட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த நிதின் சாய் என்ற மாணவர் உயிரிழந்தார். முதலில் இது ஒரு சாதாரண விபத்து என்று கருதப்பட்டது. ஆனால், காவல்துறை விசாரணையில் காரில் வந்த இளைஞர்கள் வேண்டுமென்றே இருசக்கர வாகனத்தின் மீது மோதியது தெரியவந்தது. ஒரு மாணவிக்கும், இரண்டு இளைஞர்களுக்கும் இடையேயான உறவு…
-
யாழ்ப்பாணத்தில் பூப்புனித நீராட்டு விழாவில் ஆடியவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் பூப்புனித நீராட்டு விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். பண்டத்தரிப்பு – பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் பாரம்பரிய உணவகம் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது மல்லாகம் – பயிரிட்டால் பகுதியில் நேற்று முன்தினம் (27) பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட குறித்த இளைஞர், அங்கு உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கவே, அவர்…
-
திடீரென மயக்கமடைந்த சிறுவன் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, சிறுவன் உடனடியாக கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறுவனின் , மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
-
யாழில் மின் தூக்கியில் உயிரிழந்த டிலக்க்ஷன்

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் மின் தூக்கியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இதன்போது அச்செழு வடக்கு நீர்வேலியைச் சேர்ந்த வைரவநாதன் டிலக்க்ஷன் (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறியை பூர்த்தி செய்த பின்னர் ஹோட்டலில் பயிற்சியாளராக இணைந்து பணியாற்றி வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற மின் தூக்கியானது திறந்த வெளியான மின் தூக்கியாக காணப்படுகிறது. அதனை இயக்கும் ஆழியும் (switch) கீழேயே…
-
யாழில்,மர்மமாக உயிரிழந்த சிறுவன்

யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் , சிறுவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சசிதரன் திசானுஜன் (வயது 15) எனும் சிறுவன் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளான். சிறுவனின் உடல் பாகங்களில் திடீரென வீக்கங்கள் ஏற்பட்டமையால் , கடந்த 20ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ,…
-
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்; கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா?

அம்பாறை, சம்மாந்துறையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா – 02 பௌஸ் மாவத்தை பகுதியில் இச்சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூன்று வயதான முஹம்மத் லுக்மான் என்ற ஆண் பிள்ளையே நீர் குழியிலிருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 3…