-
அறையில் அடைத்து வைத்ததால் 2 ஆவது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீர் சயிபு வீதியில் உள்ள வீடொன்றின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பு 12 பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த சிறுவன் தனது இரண்டு நண்பர்களுடன் பீர் சயிபு வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார். இதன்போது இந்த சிறுவன்…
-
இ.போ.ச. பஸ். மோதி இரண்டு வயது சிறுவன் பலி

களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் பஸ் மோதி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார் என்று களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மோதியே இந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
யாழ். சேந்தாங்குளம் கடலில் குளிக்க சென்ற இளைஞ்னுக்கு நேர்ந்த துயரம்

யாழ். சேந்தாங்குளம் கடலில் வெள்ளிக்கிழமை (21) நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோவில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் என்ற முகவரியைச் சேர்ந்த பி.சாருஜன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அவரது நண்பர்கள் 14 பேருடன் குளிப்பதற்காக இன்று மதியம் இளவாலை – சேந்தாங்குளம் கடலுக்கு சென்றனர். கடலில் குளித்துக்கெண்டு இருந்தவேளை திடீரென கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் குறித்த…
-
யாழில் தொலைக்காட்சி பார்க்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் வேலணை, செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை, செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் இன்று (16) உயிரிழந்துள்ளார். இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில் – சம்பவம் இடம்பெற்ற போது எவரும் வீட்டில் இல்லை குறித்த சிறுவன், அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதன்போது தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின்…
-
யாழ்ப்பாணத்தில் இளைஞனின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்

யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர் மாய்த்துள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞனை காணவில்லை என உறவினர்கள் தேடியவேளை அவரது சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
யாழில் வவுனியா இளைஞன் தற்கொலை

யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா – நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் யாழில் வீடொன்றில் தங்கியிருந்து மேசன் வேலை செய்து வந்த நிலையில் மனவிரக்தி காரணமாக தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். இதனையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின்…
-
வாகரையில் சிறுவனை கடத்தியவரை நையப்புடைத்த மக்கள்

நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச மக்கள் சிறுவனை மீட்டதுடன் கடத்திய நபரை மடக்கி பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (17) அதிகாலை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. வாகரை 5ம் வட்டாரத்தைச் சோந்த 5 வயதுடைய சிறுவன், தாய் தந்தையுடன் நித்திரையில் இருந்த நிலையில், சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த சிறுவன் பால் கேட்டதையடுத்து தாயார் தந்தைக்கு பக்கத்தில்…
-
யாழில் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதில் , இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். மீசாலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்ட 12 பேர் கொண்ட வன்முறை கும்பலில் நான்கு பேரை பிரதேசவாசிகள் மடக்கி பிடித்து, நையப்புடைத்து , மின் கம்பங்களில் கட்டி வைத்திருந்த…
-
மரப்பெட்டி விழுந்ததில் இளைஞன் உயிரிழப்பு

மரப்பெட்டி விழுந்ததில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப் பெட்டி ஒன்றை லொரியில் இருந்து வாழைச்சேனையில் வைத்து இறக்கும் போது அது தவறி விழுந்ததில் இளைஞன் ஸ்தலத்திலேயே மரணடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது. இவ்வாறு மரணமடைந்த இளைஞன் மீராவோடை தபாலகத்தில் பணிபுரியும் இப்றாகீம் என்பவரின் மகனான பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகம்மது றிமாஸ் என்பவராவார். மரணமடைந்த இளைஞனின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார…
-
18 வயது காதலனை கடத்திய காதலி

மஹகம – பொலேகொட பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய யுவதி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன் முச்சக்கரவண்டி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளை அவர் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது . பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த இளைஞன் அவரது காதலியின் வீட்டில் இருப்பதை பொலிஸார்…