-
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை காணி ஒரு துண்டு கூட கிடைக்காது

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார் . பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.…
-
தையிட்டி காணிகளில் ஒரு துண்டேனும் திருப்பி தரோம்; விகாராதிபதி

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்திய பொதுமக்களின் காணிகளில் ஒரு சிறு துண்டேனும் திருப்பி கொடுக்க முடியாது என திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கொழும்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை கூடிக் கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளில் பகுதியளவேனும்…
-
தையிட்டிக்கு புதிதாக வந்த புத்தர்; இராணுவ சிற்றுண்டி சாலையில்

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு தமிழ் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியது. இதனையடுத்து , கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி , தமது…
-
வடக்கில் விகாரை ஒன்று விரைவில் தரை மட்டமாகும்

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். “விகாரையைத் தாக்கி வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதே திட்டம்” என்று அவர் கூறினார். வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழர்களின் மனதை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதாக ராமநாதன் அர்ச்சுனா கூறினார்.
-
கன்னியா வெந்நீரூற்றிலும் துண்டைபோட்டார் புத்தர்

திருகோணமலை கடற்கரையில் புத்தர்சிலை முளைத்துள்ள நிலையில் அடுத்து கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்ரகு தயார் படுத்தப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. பாரம்பரிய சிவன் கோவில் 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலுடன் இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் கன்னியா உள்ளது. கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமாக இருந்திருந்த நிலையில் காணி உரிமையாளர்; தனது காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார். யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குடனும் பௌத்த…
-
யாழ் தையிட்டியில் பதற்றம்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்றுப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களைப் பொலிஸார் அகற்றியுள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் ஆர்ப்பாட்டம் பௌர்ணமி தினமான நேற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடத்தப்பட்டபோதே ஆர்ப்பாட்டக்காரர்களின்…
-
இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது; புத்தர் சிலை தொடர்பில் ஜனாதிபதி அனுர

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகிறார்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் இல்லை. பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் இனவாதத்தில் எழுதப்படப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்…
-
சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகளை அடக்குங்கள்; எம்.பி மனோகணேசன் ஆவேசம்

சட்டத்தை கையில் எடுத்து, மத தலங்களை அமைக்க அல்லது இடிக்க, எவருக்கும் உரிமை இல்லை. திருகோணமலையில் சட்டவிரோத சிலை அமைக்கும் பிக்குகள் தடுக்க பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். திருகோணமலை பதட்ட நிலை தொடர்பில், தற்போது இந்திய பயணத்தில் இருக்கும் மனோ கணேசன் எம்பி தனது எக்ஸ்-தள செய்தியில் கூறியுள்ளதாவது; ஒருங்கிணைந்த இலங்கையின் அடிப்படை, நமது நாட்டு இன, மத, மொழி பன்மைத்துவம் ஆகும். எந்த மத தலைவருக்கும்,…
-
திருகோணமலையில் அமைதியின்மை!

திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை பொலிஸார் அகற்ற நடவடிக்கை எடுத்ததையடுத்து, நேற்று இரவு அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை, 1951 ஆம் ஆண்டு பௌத்த அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பௌத்த விகாரையாகும். அங்கு நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிவர்தன தஹம் பாடசாலை சுனாமி அனர்த்தத்தால் அழிவடைந்ததையடுத்து,…
-
வவுனியாவில் பௌத்ததுறவிக்கு சிலை ; மாநகரசபையில் கோரிக்கை

மரணித்த பௌத்ததுறவி ஒருவருக்கு வவுனியாவில் சிலை அமைக்க இடம் வழங்க வவுனியா மாநகரசபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மரணித்த பௌத்ததுறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா நகரப்பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை உறுப்பினர் முகமட் முனவ்வர் வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றை அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியுள்ளார். எனினும் துணை முதல்வர் கார்த்தீபன், அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான…