Tag: Bus

  • கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

    கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

  • கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பால் துயரம்

    கிளிநொச்சியில் இளைஞன் உயிரிழப்பால் துயரம்

    கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்தே நேற்று (18) இரவு இவ்வாறு ஒருவர் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது…

  • பேருந்தில் பல்கலை மாணவிக்கு பாலியல் சீண்டல்

    பேருந்தில் பல்கலை மாணவிக்கு பாலியல் சீண்டல்

    பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தொன்றில் பயணித்த 27 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர், அவரது பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபரால் பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பேருந்தின் உள்ளே குரல் எழுப்பி தமக்கு நடந்ததை வெளிப்படுத்தியபோது, ​​பேருந்தினுள் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சந்தேக நபரைப்…

  • பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து

    பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து

    இன்று (02) தெஹியோவிட்ட பகுதியில் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 42 பயணிகள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விபரங்களை அறியத் தருகின்றோம்.

  • யாழ்ப்பாணத்தை பெருமைப்படுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

    யாழ்ப்பாணத்தை பெருமைப்படுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

    ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320 – 200 ரக விமானம் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டுள்ளது. சமீபத்தில் தெற்காசியாவின் சிறந்த விமானச் சேவை என அங்கீகாரம் பெற்ற இந்தத் தேசிய விமான நிறுவனம், யாழ்ப்பாணத்தின் வளமான பாரம்பரியத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் மதிக்கும் ஒரு அடையாளபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இலங்கை ஏர்லைன்ஸ் எடுத்த இந்தப் பெயர் சூட்டும் முடிவு, பிராந்திய அங்கீகாரத்தை வலுப்படுத்தவும், தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடவும் ஒரு…

  • பேருந்தில் இருந்து விழுந்த மாணவன்; சாரதி, நடத்துனர் இடைநீக்கம்

    பேருந்தில் இருந்து விழுந்த மாணவன்; சாரதி, நடத்துனர் இடைநீக்கம்

    வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (03) பதிவாகியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோவையும் அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை…

  • யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து சாரதியின் அனுமதி பத்திரம் பறிப்பு

    யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து சாரதியின் அனுமதி பத்திரம் பறிப்பு

    யாழில் இருந்து வவுனியா சென்ற இ.போ.ச பேருந்து ஒன்றின் சாரதியின் அனுமதிப்பத்திரம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து குறைபாடுகளை கொண்ட அரச பேருந்து , பத்து நாட்களுக்குள் பேருந்தை சீரமைக்காவிடில் பேருந்திற்கு நிரந்தர தடை உத்தரவு வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (28) யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தின் மீதே இவ்வாறு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும்…

  • தங்காலையில் பேருந்து விபத்தில் ஒருவர் பலி ; பலர் காயம்

    தங்காலையில் பேருந்து விபத்தில் ஒருவர் பலி ; பலர் காயம்

    கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை…

  • அம்பாறையில் சொகுசு பஸ்ஸொன்று விபத்து

    அம்பாறையில் சொகுசு பஸ்ஸொன்று விபத்து

    அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து மகியங்கனையின் வேவத்த பகுதியில் இன்று புதன்கிழமை (14) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தால் பஸ்ஸில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லையென மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.  

  • கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

    கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

    28 ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாகக் கீழே விழுந்த பின் அந்த நபரையும், கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேரூந்து ஒன்று சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த பேரூந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்தனர். இரு நண்பர்களும் பயணத்தை மேற்கொண்ட போது இரு நண்பர்களில் ஒருவர்…