-
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

28 ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்தில் இருந்து ஒரு நபர் தவறுதலாகக் கீழே விழுந்த பின் அந்த நபரையும், கூட வந்த நபரையும் இடையிலே விட்டுவிட்டு அரச பேரூந்து ஒன்று சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த பேரூந்தில் இரு நண்பர்கள் கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணம் செய்தனர். இரு நண்பர்களும் பயணத்தை மேற்கொண்ட போது இரு நண்பர்களில் ஒருவர்…
-
தனியார், அரச பேருந்துகள் மோதி 30 பேர் காயம்

தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
35 வருடங்களின் பின் யாழில் முன்னெடுக்கப்படும் சேவை!

35 வருடங்களின் பின் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர். கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி வரை இன்றையதினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. பேருந்து சேவை நேர அட்டவணை தொடர்பாக…
-
தனியார் பஸ் – லொறி விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம்

ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார…
-
பஸ் மிதிபலகையில் இருந்து விழுந்து நபர் உயிரிழப்பு

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹம்பஸ்வலான பகுதியில் பஸ் மிதிபலகையில் பயணித்த வயோதிபர் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹம்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிபர் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, ருவன்வெல்லவிலிருந்து தன்னொருவ நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் முன் பக்கத்தில் உள்ள மிதிபலகையில் பயணித்த வயோதிபர் ஒருவர் கீழே தவறி…
-
பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு

இன்று (22) அதிகாலை பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலையில் உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்ரீகர்கள் குழுவுடன் வந்து, ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். இதன்போது, அவர்கள் வந்த பேருந்தில் இவ்வாறு தீப்பிடித்துள்ளது. அந்த பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 55…
-
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து; வாள்வெட்டுத் தாக்குதலால் பயணிகள் அதிர்ச்சி

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பஸ்ஸின் சாரதி மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளை அதிச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த பஸ் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், பஸ்ஸில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.…
-
இன்று இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் பலி….35 பேர் காயம்

ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில், இன்று சனிக்கிழமை (01) பஸ் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் கிண்ணியா மற்றும் ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் மற்றும் 66 வயதுடைய பெண் ஒருவரும் ஆவர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கள்ளக்காதலியை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்ட கள்ளக்காதலன்!

தன்னுடைய கள்ளக்காதலியை பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படும் அந்த பெண்ணின் கள்ளக்காதலனை கைது செய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தி நான்கு வயதுடைய திருமணமானவர் என பொலிஸார் தெரிவித்தனர். இவருடைய காதலி என கூறப்படும் பலுகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த பெண் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த காதலர்கள் இருவரும் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில்…
-
யுவதியை பலியெடுத்த இ.போ.ச பேருந்து

யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்த இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்துள்ளார்.