-
புத்தளத்தில் 4 பேருந்துகளுக்கு தீவைத்து விட்டு தப்பியோடிய நபர்!

வென்னப்புவ பிரதேசத்தில் நான்கு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வென்னப்புவ லேக் வீதியில் உள்ள வாகன திருத்தும் நிலையமொன்றில் பழுதுபார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு பஸ்கள் இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையில், அருகில் உள்ள சிசிரிவி கமராவில் இருந்து, ஒரு நபர் வந்து பஸ்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த…
-
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற அரச பஸ் மீது தாக்குதல்

மதுபான போத்தலால் அரச பஸ் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா வீதிக்குரிய ND-9941 இலக்க பஸ் மீது இவ்வாறு தாக்குதல் 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பஸ் காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு தாக்குதல்…
-
ஜூலை முதல் குறைக்கப்படும் பேருந்து கட்டணம்

வருகின்ற ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணமானது 5 விகிதத்தால் குறைக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச பேருந்து கட்டணமானது இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும் என்றும் புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணமானது 28 ரூபாவாக குறைக்கப்பட இருப்பதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.
-
மாங்குளம் கோர விபத்தில் மூவர் உடல் சிதறி பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது…
-
கொழும்பு பேருந்து விபத்தில் 30 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – அவிசாவளை வீதியில் ரணால பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (19) ஏற்பட்டது. கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும், எம்பிலிபிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக நவகமுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
தண்டவாளத்தில் பேருந்தை ஓடவிட்ட சாரதி கைது

ரயில் தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சம்பவம் தொடர்பில் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய சாரதி, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கொழும்பு – எம்பிலிப்பிட்டிய தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி ரயில் மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய சாரதியுடன்…