Tag: Canada

  • தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்

    தந்தை செல்வாவின் மூத்த மகள் கனடாவில் காலமானார்

    தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த…

  • பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம்

    பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம்

    பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களிலேயே தங்கியுள்ளது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி ஹமாஸ் இல்லாமல் அடுத்தவருடம் பாலஸ்தீன அதிகாரசபைக்கு தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் கனடா உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றங்கள் விஸ்தரிப்பு,காசாவில் மோசமடைந்துவரும் நிலைமை ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ்…

  • கனடாவில் இருந்து மச்சானுடன் யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!

    கனடாவில் இருந்து மச்சானுடன் யாழ் வந்தவர் சடலமாக மீட்பு!

    கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் நேற்றைய (24) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் அவரது…

  • ஈழத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரி கடிதத்தால் சர்ச்சை

    ஈழத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரி கடிதத்தால் சர்ச்சை

    இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஒருவருக்கு புகலிடக்கோரிக்கை விடயத்தில் ஆதரவாக கடிதம் எழுதினார் என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக ஊடகமொன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதேவேளை கனேடிய பிரதமர் மார்க் கார்னி இது தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கனடா அதிகாரிகள் கருதிய நபர் ஒருவருக்கு கனடா பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் என கோரும் கடிதத்தை ஹரி ஆனந்தசங்கரி எழுதினார் என குளோபல்…

  • கனடா செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண நபர் விபரீத முடிவு

    கனடா செல்ல ஆசைப்பட்ட யாழ்ப்பாண நபர் விபரீத முடிவு

    வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். புங்குடுதீவு, 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செல்வராசா லிபாஸ்கரன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 80 இலட்சம் ரூபா பணத்தினை கொழும்பில் உள்ள முகவரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தனது பணத்தினை மீள…

  • ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி

    ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் கனடா பிரதமர் மார்க் கார்னி

    இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.…

  • கனடா விமான நிலையங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல்

    கனடா விமான நிலையங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல்

    கனடாவின் பல்வேறு விமான நிலையங்களில் நேற்று வெடி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, பெருமளவான விமானங்கள், தாமதமாகவே சேவையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா, மொன்றியல், எட்மொன்டன், வின்னிபேக், கல்காரி மற்றும் வான்கூவர் ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதாக கனேடிய தகவல்கள் கூறுகின்றன. குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பிலான பின்னணி குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

  • கணவனை கனடா அனுப்ப முயன்ற யாழ் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    கணவனை  கனடா அனுப்ப முயன்ற யாழ் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

    யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார். அதன் பின்பு அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி…

  • கனடா, பிரித்தானியா பிரான்ஸில் முள்ளிவாய்கால் நினைவு உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

    கனடா, பிரித்தானியா பிரான்ஸில் முள்ளிவாய்கால் நினைவு உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

    கனடா, பிரித்தானியா பிரான்ஸில் முள்ளிவாய்கால் நினைவு உணர்வுபூர்வமாக நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கனடாவில் முள்ளிவாய்கால் நினைவாலயத்தில் தமிழின அழிப்பு நாளில் 16 ஆம் ஆண்டின் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பிரான்சில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் உணர்வுபூர்வாம நடைபெற்றது. டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால்…

  • கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வேட்பாளர்கள்!

    கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வேட்பாளர்கள்!

    கனடா தேர்தல் – வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தமிழ் கனேடிய வேட்பாளர்களுக்கும் கனடிய தமிழர் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனடிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது- 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கனடிய பிரதிநிதிகளிற்கும் கனடிய தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள் 2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்கு கனடிய தமிழர் பேரவை தனது…