Tag: Cancer

  • மொட்டியடித்த அர்ச்சுனா எம்.பி!

    மொட்டியடித்த அர்ச்சுனா எம்.பி!

    நடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக மொட்டை போட்டுக்கொண்டுள்ளார் அதாவது பிறந்தநாளை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளர்களுக்கு தலைமுடி தயாரித்து வழங்கும் இலங்கை நிறுவனம் ஒன்றிற்கு தலைமுடியை தானமாக வழங்கி இருக்கிறேன். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.புற்று நோயாளிகளின் வலிகளையும் புரிந்து கொள்வோம். தனது முகநூலில் என குறிப்பிட்டுள்ளார்

  • ஜோ பைடனுக்கு புற்றுநோய்

    ஜோ பைடனுக்கு புற்றுநோய்

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிக்கு தற்போது 82 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி

    நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி

    தமிழ் திரை உலகில் குணச்சித்திர நடிகராக இருந்த ரவிக்குமார் என்பவர் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். கேரளாவை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 70களில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். உல்லாச யாத்திரை என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழிலும் சில படங்கள் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு மலபார் போலீஸ். ரமணா. மாறன். விசில். சிவாஜி. வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணசத்திர நடிகராக நடித்துள்ளார். அது மட்டுமின்றி சில தொலைக்காட்சி…

  • புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா!

    புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா!

    புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது 2025ம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்

  • சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் ஆபத்து

    சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களால் ஆபத்து

    சருமத்தை வெண்மையாக்கும் கிறீம்களை பயன்படுத்துவதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் இந்திரா கஹவிட்ட இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள வைத்தியர், உலக சுகாதார ஸ்தாபனமும் இலங்கை சுகாதார அமைச்சுக்கும் இடையில் முகத்தை வெண்மையாக்கும் கிறீம்களில் பாதரசத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதை நோக்கமாகக்…