Tag: chemmani mass graves

  • செம்மணி அணையா விளக்கை உடைத்த விசமிகளுக்கு சாட்டையடி

    செம்மணி அணையா விளக்கை உடைத்த விசமிகளுக்கு சாட்டையடி

    யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டி அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட அணையா விளக்கு மீள நேற்று மாலை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் இனந்தெரியாதோரால் இடித்தழிக்கப்பட்டிருந்த அணையா விளக்கு இன்று மாலையில் மீண்டும் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி முன்னதாக இடித்தளிக்கப்பட்டிருந்தது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில்; ”அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட…

  • தமிழ்த் தேசியக் கட்சிகள் கையெழுத்துப் போராட்டம்.!

    தமிழ்த் தேசியக் கட்சிகள் கையெழுத்துப் போராட்டம்.!

    யாழ்ப்பாணம் செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட அனைத்துவித இனப்படுகொலைகள், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் சமர்ப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கையெழுத்துப் போராட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன், வடக்கு கிழக்கிலே எமது தமிழ் இனத்தை வயது…

  • அனுரவிடம் நீதி கேட்டு கடிதம் எழுதியது முட்டாள் தனம்

    அனுரவிடம் நீதி கேட்டு கடிதம் எழுதியது முட்டாள் தனம்

    யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதை குழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற வன்மம் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் செம்மணி மனித புதைகுழி இலங்கை தீவில் தமிழ்…

  • செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை; ஜனாதிபதி அநுரகுமார

    செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை; ஜனாதிபதி அநுரகுமார

    செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மயிலிட்டியில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

  • பச்சிளம் குழந்தையின் எலும்புக்கூடு; மனதை உலுக்கும் செம்மணி மனித புதைகுழி

    பச்சிளம் குழந்தையின் எலும்புக்கூடு; மனதை உலுக்கும் செம்மணி மனித புதைகுழி

    யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை,ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை எலும்புக்கூட்டு தொகுதியொன்று நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், சிசு ஒன்றினதும், இடுப்பில் தாயம் ஒன்றுடனும் எலும்புக்கூடு தொகுதியொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதைகுழிகளில் இருந்து செருப்பு , தாயம் , காசு, உள்ளிட்ட சான்று பொருட்கள் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில்…

  • யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்; குரல்கொடுக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

    யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்; குரல்கொடுக்கும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்

    யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரைசெய்யவேண்டும்என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளதாவது, ஆறாம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து உரையாற்றுவதற்கான அனுமதியை நான் கோருகின்றேன், எனக்கு அனுமதியளிக்கப்பட்டால் பின்வரும் விடயங்கள்…

  • இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன

    இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன

    இலங்கையிலே நிலத்திற்கு கீழ் தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை (04) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறிகையில், செம்மணி மனிதப் புதைகுழி ஆய்வு நடைபெறுகிற இடத்திலே ஸ்கேனர் கருவி இன்றைக்கு பாவிக்கப்பட்டிருக்கிறது. அதனை பாவிப்பதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது…

  • செம்மணியில் வெளிவந்த சவப் பெட்டி

    செம்மணியில் வெளிவந்த சவப் பெட்டி

    யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியான தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து சட்ட ரீதியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு பிரேதப் பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டது. நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டிலிருந்து சட்ட ரீதியாக உடற்கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு பிரேதப் பெட்டியில்…

  • செம்மணி மனிதப் புதைகுழியில் குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ; தோண்ட தோண்டவரும் துயரங்கள்

    செம்மணி மனிதப் புதைகுழியில் குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ; தோண்ட தோண்டவரும் துயரங்கள்

    யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை 8 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்போது குழந்தைகள் அருந்தும் பால் போச்சி ஒன்றும், ஆடையை ஒத்த சில துணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது. அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. எச்சங்களில், 6 முதல் 7 வரை…

  • யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் ஆரம்பம்

    யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் ஆரம்பம்

    இடைநிறுத்தப்பட்ட யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அந்தப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர்…