-
பாடகி சின்மயி ஸ்ரீபாதாவிற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து பல்வேறு முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீடு மற்றும் திருச்சி கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு அநாமதேய மின்னஞ்சல் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று, திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியொன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.…
-
கொழும்பிலிருந்து புறப்பட்ட Air India விமானம் அவசரமாக தரையிறக்கம்

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். விமானம் தரையிறக்கப்பட்டது, மேலும்…
-
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு: இலங்கைப் பெண்ணை விசாரிக்க உத்தரவு

தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது. மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் என்ற குறித்த பெண் தமிழ்நாட்டின் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகவரத்தினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். இது…
-
சென்னை துப்புரவு பணியாளர்களின் போராட்டத்தில் பாடகி சின்மயி

சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளை, தனியாருக்கு வழங்கியதற்கு எதிப்பு தெரிவித்து, துப்புரவு பணியாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 6 நாட்களாக துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த போராட்டத்தில், 500 லீட்டர் தண்ணீர் போத்தல்களுடன் பிரபல பாடகி சின்மயி கலந்துக்கொண்டார். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்ற துப்புரவு பணியாளர்களின்…
-
நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் ரெய்டு

நடிகர் ஆர்யாவுக்கு சென்னையில் ஐந்து ஹோட்டல்கள் இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் ஐந்து ஹோட்டல்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவுக்கு சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம் உள்பட ஐந்து இடங்களில் ஹோட்டல்கள் உள்ளன. இந்த ஐந்து ஹோட்டல்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். வருமானத்தை மீறி சொத்து சேர்த்தது, வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் காரணமாக ஆர்யாவின்…
-
காதலன் கார் வாங்க வீட்டில் திருடிய காதலி!

சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலனுக்கு கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து ரூ.20 இலட்சம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது காதலனின் விருப்பத்திற்கு இணங்க, கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து ரூ.20 இலட்சத்தை திருடி அவனிடம் கொடுத்துள்ளார். காதலன் அந்தப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த காதலன் காதலியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனை…
-
சென்னையில் புதிய வகை கொரோனாவுக்கு முதல் பலி

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸின் பரவல் உலகின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவிலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் இதன் பாதிப்பு மிக குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மறைமலைநகரை சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி…
-
நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி

தமிழ் திரை உலகில் குணச்சித்திர நடிகராக இருந்த ரவிக்குமார் என்பவர் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். கேரளாவை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 70களில் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். உல்லாச யாத்திரை என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழிலும் சில படங்கள் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு மலபார் போலீஸ். ரமணா. மாறன். விசில். சிவாஜி. வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணசத்திர நடிகராக நடித்துள்ளார். அது மட்டுமின்றி சில தொலைக்காட்சி…
-
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி

இயக்குனர் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதி, 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என பெயர் எடுத்தவர் பாரதிராஜா. தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகன் மனோஜ். உதவி இயக்குனராக மணிரத்னத்திடம் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக வேண்டும் என சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஆனார். அப்பா பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், கடல் பூக்கள் போன்ற படங்களில் நாயகனாக…
-
மகன்களுக்கு அனஸ்தீசியா கொடுத்து தூக்கிலிட்ட மருத்துவர்? சென்னையில் பயங்கரம்

சென்னையில் கடன் பிரச்சனையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர், தமது 2 மகன்களும் தற்கொலை செய்துகொள்ள பயந்ததால் அவர்களுக்கு அனஸ்தீசியா கொடுத்து, அவர்களை தூக்கிலிட்டதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை மற்றும் தடயவியல் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் (52).…