-
குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை; இளம் பெண்ணின் ஈவிரக்கமற்ற செயல்!

சென்னை நந்தனம், சிஐடி நகர் அருகே , பிறந்து ஒரு மாதம் ஆன பெண் குழந்தையை குப்பைத் தொட்டியில், வீசிச் சென்றதாக கூறப்படுகின்றது. குப்பைத் தொட்டியில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. அப்போது அருகிலுள்ள மெக்கானிக் கடை உரிமையாளர் கலியபெருமாள் என்பவர் குப்பைத் தொட்டி அருகே சென்று பார்த்தபோது அங்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது. உடனடியாக கலியபெருமாள் அருகில் உள்ள சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.…
-
ஆம்ஸ்ட்ராங் கொலை; இயக்குநர் நெல்சனிடம் விசாரணை

அரசியல்வாதி ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் பொலிஸார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து…
-
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் கணவர் நிரபராதி என விடுதலை!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2020 டிசம்பர் 9ஆம் திகதி பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, பொலிஸில் முறைப்பாடளித்தார். இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் பிணையில்…
-
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சுற்றுலா சொகுசுக் கப்பல் !

இந்தியா, சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இலங்கை வந்த நிலையில் குறித்த கப்பல் இன்று (19) காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலானது 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. இக் கப்பலானது நேற்று முன்தினம் இலங்கை – ஹம்பாந்தோட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது. இந்நிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. அதேவேளை…
-
நடிகர் விஜய்யை சந்தித்த கனவுக்கன்னி ரம்பா இந்திரகுமார்

நீண்ட நாட்களின் பின் 90 களில் ரசிகர்களின் மனதை வென்ற கனவுக்கன்னி ரம்பா – இந்திரகுமார் தனது குடும்பத்துடன் நடிகர் விஜய்யை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது நடைகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கியதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நடிகை ரம்பா மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் போன்ற வெற்றிப் படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர்.…
-
சர்தார் 2 படப்பிடிப்பில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்தார். கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார் 2’. இந்தப் படத்தில் கார்த்தி, அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு…
-
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மற்றும் வரும் ஜூலை 3 ஆம் திகதி என இரண்டு கட்டங்களாக விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.…
-
விஜய் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாராட்டு விழாவிற்கு கட்டுப்பாடுகள்

சென்னையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. சென்னையில் எதிர்வரும் 28ம் மற்றும் ஜூலை 3ம் திகதி குறித்த பாராட்டு விழா நடைபெற உள்ளது. பாராட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் நிலையில் விழாவுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாராட்டு விழாவில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேப்பர்,பேனா கொண்டு…
-
பீடி தர மறுத்த தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகன்

பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு (17) கொலை செய்யப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொலிசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பொலிசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண்…
-
பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த தமிழ் நடிகர் பிரதீப் கே விஜயன்

தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் மிர்ச்சி சிவா – வசுந்தரா காஷியாப் நடிப்பில், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொன்ன புரியாது’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே விஜயன். அதிக உடல் பருமனோடு இருப்பதால் பல படங்களில், காமெடி கலந்த குணச்சித்திர வேடத்திலேயே நடிக்க இவருக்கு…