-
3 வயது மகனை ஏரியில் வீசி கொன்ற தந்தை; சென்னையில் அதிர்ச்சி

சென்னை போரூர் ஏரியில் தனது 3 வயது மகனை தூக்கி வீசிய தந்தை குற்ற உணர்ச்சியில் தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் – மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ஏரி தண்ணீரில் வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார். அப்போது…
-
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையம் உட்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையம், பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கட்டிடம், நந்தனம் ஒய்எம்சிஏ வளாகம் என 3 இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து சென்னைகாவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். பரப்ரப்படைத பொலிசார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்துசென்று மெட்டல்…
-
கருடசேவையில் திடீரென சரிந்து விழுந்த பெருமாள்!

திருவொற்றியூர் வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது பெருமாள் திடிரென சரிது விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா இன்று இடம்பெற்றது. இதன்போது கருட சேவை நிகழ்ச்சியில் தண்டு உடைந்து திடீரென பெருமாள் சாய்ந்ததில், அர்ச்சகர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கல்யாண வரதராஜ பெருமாள் சன்னதியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் ஏற்பட்ட இச்சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
சென்னையில் முள்ளிவாய்க்கால் தமிழன படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள்

சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் தமிழன படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளது. கடற்கரையோரத்திற்கு மக்களை நெருக்கித் தள்ளினார்கள். மணற்வெளியில் ஒளிந்துகொள்ள இடமின்றி குழந்தைகளோடும், கோடைகால வெப்பத்துடனும் குண்டுமழையை எதிர்கொண்டார்கள். மே15ம் தேதி, இனப்.படுகொலை நடக்க இருக்கிறதென ஐ.நாவிற்கான இனப்படுகொலை தடுப்பு மேற்பார்வையாளர் பதறிப்போய் அறிக்கை வெளியிடுகிறார். இதற்கு முதல்நாள் மே 14ம் தேதி, போர்ச்சூழலில் சிக்குண்ட குழந்தைகளுக்கான…
-
மெட்ரோவால் போக்குவரத்து பாதிப்பு ;மதுபோதையில் அதிகாரியை தாக்கிய பாடகர் வேல்முருகன்

மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில் கைதான பின்னணி பாடகர் வேல்முருகன் இன்று (மே 13) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இந்நிலையில், நேற்று (மே 12) அதிகாலை அந்த பக்கமாக காரில் வந்த வேல்முருகன், ஆற்காடு சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த மெட்ரோ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த…