-
யாழ்ப்பாணத்தில் புது பணக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்; குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன. வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணத்தினை பெருக்கோடு யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் , மீற்றர் வட்டிக்கு…
-
இஷாரா செவ்வந்திக்கு உதவியோர்; யாழில் பலர் கிடுக்கிப்பிடியில்

இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகு அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினரே படகினை மீட்டுள்ளதாகவும் , படகின் வெளியிணைப்பு இயந்திரம் மீட்கப்படவில்லை எனவும், படகின் உரிமையாளரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை செவ்வந்தி தொடர்பிலான…
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் ரணில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு சென்ற பயணம் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு…
-
கருணாஅணி இனிய பாரதி கைது; காட்டிக்கொடுத்த பிள்ளையான்

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான இனிய பாரதி என அழைக்கப்படும் கே. புஷ்ப குமார் எனும் கைது செய்யப்பட்டுள்ளர். குற்றப் புலனாய்வு பிரிவினரின் மற்றொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை கைது செய்துள்ளனர். குறித்த கைது தொடர்பாக அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தனது முகப்புத்தகத்தில்…
-
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய இருவர் மடக்கிப்பிடிப்பு

சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் பல குற்றச் செயல்கள், கொலைகள், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர் எனக் கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் உள்ளார். இந்நிலையில், பிள்ளையான் குழுவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கொழும்பு குற்ற தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிடைத்த தகவல்களின் படி, அரச சாட்சியாக மாறியுள்ள குகன் என்பவர், பிள்ளையானிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வழங்கியுள்ளார். அதன்படி, இன்று பிள்ளையான் அலுவலகத்தில் நடைபெற்ற…
-
பிள்ளையான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கடந்த செவ்வாய்க்கிழமை (08) மாலை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.…
-
சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான், மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்றுமுன்தினம் மாலை கைது செய்யப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின்…
-
ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் ; சாடும் பிள்ளையான்

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கையில் பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.…
-
கர்தினால் ரஞ்சித் பற்றிய ஒலிப்பதிவால் சர்ச்சை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் பிரபலமாகிய நாமல் குமார, கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். தேசிய கத்தோலிக்க தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் டெய்லி மிரர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்தவை வினவிய போது, கர்தினாலிடம் CID வாக்குமூலம் பதிவு…
-
காசோலை மோசடி; முன்னாள் வன்னி மாவட்ட எம்பி தீலிபன் கைது

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் இன்று(20) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளாரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி(EPDP) சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை நேற்றைய தினம் (19) இரவு வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர்.…