-
கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து விபத்தில் பலர் காயம்

கொழும்பிலிருந்து மன்னார் செவ்வாய்க்கிழமை (21) இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் புதன்கிழமை (22) அதிகாலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவில் குறித்த விபத்து .இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. -குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-
திருமணமான ஒருவருடத்தில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்தபெரும் துன்பம்; துயரத்தில் உறவுகள்

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். நேற்று(16) அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் மற்றும் தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப்…
-
கிளிநொச்சி மற்றும் யாழில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி

நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டிற்கு இஷாரா அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தங்காலை பகுதியிலும் இஷாரா தங்கியிருந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதேவேளை, சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் இஷாரா செவ்வந்தி வாடகை வாகனம் ஒன்றினூடாக கிளிநொச்சிக்கு சென்று…
-
இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் விடயத்தில் தடுப்புக்காவல் உத்தரவுகள்

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும்…
-
கொழும்பு நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு; அதிபர் உட்பட 7 பேர் கைது

நுகேகொடையில் உள்ள ஒரு ஹோட்டலில் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குறித்த சிறுவன் படித்து வந்த பாலர் பாடசாலையின் உப அதிபர் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி காலை மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் பதிவாகியுள்ளது. குறித்த தினத்தன்று இறந்த சிறுவன் பயிற்சியாளரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில்…
-
கொழும்பிலிருந்து புறப்பட்ட Air India விமானம் அவசரமாக தரையிறக்கம்

கொழும்பிலிருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று 158 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா (Air India) விமானத்தில் பறவை மோதியதால், விமான நிறுவனம் அதன் பயணத்தை ரத்து செய்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு பறவை மோதியது கண்டறியப்பட்டது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். விமானம் தரையிறக்கப்பட்டது, மேலும்…
-
கொழும்பில் போதைக்கு அடிமையான கணவனால் இளம் பெண் எரித்துக்கொலை

கொழும்பு – வெல்லம்பிட்டி, லிசன்பொல பகுதியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான கணவர், தனது இளாம் மனைவியை தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்ததாகவும், சந்தேக நபர் பலமுறை பெண்ணைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் ரிக்ரொக் சமூக ஊடக பிரபலமான 29 வயதுடைய இளம் தாயாவார். பெண்ணின் கணவர் வீட்டின் கூரையை அகற்றி, வீட்டிற்குள் நுழைந்து, பெட்ரோல் போத்தலைக் கொண்டு…
-
கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மர்ம பொதி

கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து கைக்குண்டுகள் அடங்கிய பொதி ஒன்று பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொதியிலிருந்து 10 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இலங்கையில் முதன்முறை 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!

இலங்கையில் தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தாயொருவர் 6 குழந்தைகளை பிரசவித்த அரிய நிகழ்வு பதிவாகியுள்ளது. சிசேரியன் மூலம் 31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள். பேராசிரியர் டிரான் டயஸின் பராமரிப்பில், அதிகாலை 12:16 முதல் 12:18 வரை இரண்டு நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. இந்நிலையில் தாய் மற்றும் பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக…
-
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு; விமான நிலையத்தில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் இருந்து கைக்குண்டு ஒன்றும் இரண்டு வாள்களும் மீட்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.