-
மூடப்படும் கொழும்பு-கண்டி வீதி! சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பிரதேசத்திற்கு அருகில் சனிக்கிழமை (08-06-2024) இடையிடையே மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அவ்வப்போது சாலை மூடப்படும். இந்த வீதியில் உள்ள உறுதியற்ற பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு இந்த மூடல் அவசியம் எனவும் கேகாலை மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
-
தண்டவாளத்தில் பேருந்தை ஓடவிட்ட சாரதி கைது

ரயில் தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சம்பவம் தொடர்பில் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய சாரதி, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். கொழும்பு – எம்பிலிப்பிட்டிய தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி ரயில் மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய சாரதியுடன்…
-
கொழும்பில் உள்ள அபாயகரமான மரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்!

கொழும்பு மாநகர சபையின் (CMC) அதிகார வரம்பிற்குள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேசிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வாறான அதிக ஆபத்துள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் பூரண…
-
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்; 20 லட்சம் சன்மானம்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய கொழும்பு – தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதன்படி, சந்தேகநபரின் பல புகைப்படங்களை பொலிஸார் நேற்று (25) ஊடகங்களில் வெளியிட்டுள்ள நிலையில் அவரை காட்டிக்கொடுப்போருக்கு 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். சந்தேக நபர், 46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெரார்ட், தெமட்டகொட பிரதேசத்தில் வசிப்பவர், சுமார் 05 அடி 06 அங்குலம்…
-
தடை செய்யப்பட்ட தடுப்பூசியால் ஒருவர் உயிரிழப்பு

தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தீக்காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17 ஆவது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு இவருக்கு Cefuroxime என்ற தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்தியருமான குமார விக்கிரமசிங்க தெரிவிக்கையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்…
-
கொழும்பில் தனியார் பேருந்து மோதியதில் 10 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!

புதிய குருந்துவத்தை பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இன்று (22) காலை புதிய குருந்துவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹெந்தென்னவில் இடம்பெற்றுள்ளது. மல்கொல்ல, பதித்தலாவ பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி அதே பேருந்தில் இருந்து இறங்கி, பேருந்தின் முன்னால் வீதியைக் கடக்க முற்பட்ட போது, அவர் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த அவர், குருந்துவத்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம்…
-
கொழும்பில் நபர் ஒருவர் அடித்துக்கொலை

கொழும்பு 13, ஜம்பெட்டா வீதியிலுள்ள 67 வயதுடைய நபர் ஒருவர் அவரது இல்லத்தில் வைத்து தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், உயிரிழந்த நபர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், இவர் டி ஜெஸ்டின் பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து தடியால் தாக்கி இப்படுகொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
கொழும்பில் வீடொன்றில் வைத்து இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!

ஹோகந்தர, ஹொரஹேன பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (15-05-2024) 7.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவரால் தலையில் கட்டையால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அத்துருகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஹோகந்தர, ஹொரஹேன வீதியில் வசிக்கும் 26 வயதுடைய திருமணமான இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று (16) காலை அத்துருகிரிய பொலிஸாரால்…