-
இளம் தம்பதி வெட்டிக் கொலை

ஹூங்கம – வடிகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 28 வயதுடைய கணவரும் அவரது மனைவியுமே இதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தம்பதியினர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸார்…
-
மஹிந்தவை சந்திக்க நெடுந்தூரம் பயணம் செய்த தம்பதி

குருநாகல், கல்கமுவவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க தங்காலைக்கு ஆறு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கொழும்பிலிருந்து தங்காலை – கார்ல்டன் இல்லத்திற்கு சென்றிருப்பதை அறிந்ததும், அவர் மீதான தங்கள் பாசத்தின் காரணமாக இந்த பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாக தம்பதியினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடலில் ஈடுபட்டனர். அதேநேரம், முன்பள்ளி சிறுவர் பாடசாலையை சேர்ந்த குழுவொன்று அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து,…
-
வவுனியாவில் 14 கோடி ரூபாய் மோசடி செய்த ஜோடி

பெறப்பட்ட பணத்தை திருப்பித் தராமல் வெற்று காசோலைகளை வழங்கி பொதுமக்களிடம் 140 மில்லியன் ரூபாயை மோசடி செய்த திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், வவுனியா பொது மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். வணிக நோக்கங்களுக்காகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ததாக குற்றப் புலனாய்வுத் துறையின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு 2 க்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து…
-
தகாத உறவு ; கர்ப்பிணி மனைவியின் கழுத்தை வெட்டிவீசிய கணவன்; வவுனியாவில் பயங்கரம்

வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார். இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார். கணவன்- மனைவிக்கிடையில்…
-
சினிமாப்பாணியில் காதலனை தாக்கி யுவதியை கடத்தி சென்ற கும்பல்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் வைத்து, புதன்கிழமை (22) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார்…
-
விடுதியில் கணவன் – மனைவி கைது

வத்தளை விடுதியில் சுயநினைவின்றி இருந்த பெண் போதைப்பொருளுடனும், அவரது கணவன் ரி -56 ரக துப்பாக்கியுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வத்தளை – ஹேகித்த வீதி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று சுயநினைவின்றி இருக்கின்றார் என்று வத்தளை பொலிஸாருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபரான பெண்ணுக்கு முதலுதவி…
-
சடலமாக மீட்பட்ட இளம் தம்பதி; அயலவர்கள் அதிர்ச்சி

பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றத்தை இனங்கண்ட பொதுக்கள் இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இரண்டு சடலங்களுக்கு அருகாமையில் நஞ்சு போத்தல் இருப்பதாகவும் சிறிது காலம் சடலமாக மீட்கப்பட்ட…
-
வவுனியா இரட்டைகொலை சம்பவம்; நீதிமன்ற உத்தரவால் அதிருப்தி

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணம் இன்மையால் பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்…
-
பலரை ஏமாற்றி இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற தம்பதி கைது

நிதி மோசடியில் ஈடுபட்டு படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர், மீண்டும் நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (26) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 வருடங்களுக்கு முன்னர் 1.6 பில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் குறித்த தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
200 கோடி ரூபாய் போதைப்பொருளுடன் தம்பதி கைது

சுமார் 200 கோடி ரூபாய் பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் கணவன் மனைவி ஆகியோர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று செவனகல, நுகேகலயாய, கிரிவெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தது. இதன்போது வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக…