-
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்; தேரருக்கு ஆப்பு

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடியாணை பிறப்பித்து வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், எதிர்வரும் ஜனவரி 26 திகதி, குறித்த வழக்கை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் கருத்து வெளியிட்டபோது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என தெரிவித்தார். இந்நிலையில் பிடியாணை…
-
யாழ்.பல்கலைக்கழக 19 மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 10ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர் . சிரேஷ்ட மாணவர்கள் 19 பேர் கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று புதன்கிழமை (03)…
-
கனடா, சுவிட்சர்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக மோசடி

கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி காலி மற்றும் நிக்கவரெட்டிய பகுதிகளை…
-
இளங்குமரன் எம்.பி க்கு எதிராக சுமந்திரன் வழக்கு

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இளங்குமரன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சாமர நாணயக்கார, கஜபாகுவுக்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரியதால் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் அங்கிருந்து கடந்த மே 29ஆம் திகதி பலாலி…
-
மட்டக்களப்பில் அணிவகுப்பில் சிக்கிய ஆண் செவ்வந்தி!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை போல அணிந்து உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன் சில சட்டத்தரணிகளையும் ஏமாற்றிய நடமாடி வந்துள்ள போலி சட்டத்தரணி ஒருவரை சனிக்கிழமை (08) ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவட்டத்தில் உள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களை நீதிமன்றில்…
-
6 பேருக்கு மரண தண்டனை; து அம்பாறை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை…
-
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தீர்ப்பு விரைவில்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இன்று அறிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த மனு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வித்தியா கொலை…
-
பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸ் மா அதிபரின் சகோதரி ; நீதிமன்றம் அதிரடி

பொலிஸ் மா அதிபரான ரன்மல் கொடிதுவக்குவின் சகோதரி என கூறி போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது. கம்பஹாவில் உடுகம்பொல சந்தைக்கு அருகில் கடந்த சனிக்கிழமை (01) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய கார் ஒன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்த முயன்றுள்ளனர். இதன்போது காரில் இருந்த பெண் ஒருவர் தான் ஒரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான ரன்மல்…
-
இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் விடயத்தில் தடுப்புக்காவல் உத்தரவுகள்

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் பேலியகொட பிரிவிலும்…
-
மூட்டை முடிச்சுக்களுடன் துரத்தப்பட்ட யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய…